Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சம்பளம் 6 மடங்குவரை உயர்வு?

In கிாிக்கட்
Published: 06:12 GMT, Dec 6, 2017 |
0 Comments
1218
icon_com
This post was written by : Anojkiyan
jad

வீரர்களின் சம்பளத்தை உயர்த்தும்படி, இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, டோனி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் இந்திய கிரிக்கெட் சபையிடம் கோரிக்கை முன்வைத்திருந்த நிலையில், இதற்கு வெகுவிரைவில் சாதகமான பதிலொன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இதுகுறித்து இந்திய கிரிக்கெட் சபையின் நம்பதகுந்த வட்டாரங்கள் குறிப்பிடுகையில், புதிய ஒப்பந்தத்தின்படி ‘ஏ’ தரநிலை வீரர்களுக்கு ஆண்டுக்கு 12 கோடி ரூபாயும், ‘பி’ தரநிலை வீரர்களுக்கு 8 கோடி ரூபாயும், ‘சி’ தரநிலை வீரர்களுக்கு 4 கோடி ரூபாயும் வழங்கப்படும் என குறிப்பிட்டுள்ளது.

அதேபோல அடுத்துவரவுள்ள ஒப்பந்தத்தில் இன்னும் சிலர் முதல்தரநிலைக்கு உயரக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய ஒப்பந்தத்தின்படி ‘ஏ’ தரநிலையில் விராட் கோஹ்லி, மகேந்திர சிங் டோனி, அஜின்கியா ரஹானே, ரவிச்சந்திரன் அஸ்வின், ரவீந்திர ஜடேஜா, முரளி விஜய், புஜாரா ஆகியோர் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)