Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஷால் விடயத்தில் சதி நடந்துள்ளது: தொல்.திருமாவளவனின் குற்றச்சாட்டு

In இந்தியா
Updated: 15:30 GMT, Dec 6, 2017 | Published: 05:49 GMT, Dec 6, 2017 |
0 Comments
1144
icon_com
This post was written by : Puvanes
thol001

ஆர்.கே.நகர் தொகுதிக்கான இடைத்தேர்தலை ரத்து செய்வதற்கான சதி மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் தெரிவித்துள்ளார்.

விஷாலின் இடைத்தேர்தல் வேட்பாளர் மனு நிராகரிக்கப்ப விடயம் தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலமாகவே இதனைக் கூறியுள்ளார்.

குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

விஷாலின் வேட்புமனு விடயத்தில் விதிமுறைகளுக்கு மாறாக தேர்தல் ஆணையகம் நடந்துகொண்டுள்ளதால் அதன் நம்பிக்கைத் தன்மையானது கேள்விக்குறியாகிவிட்டது. எனவே ஆர்,கே.நகரில் உள்ள தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்றவேண்டும்.

விஷாலின் வேட்புமனு ஆரம்பத்தில் நிராகரிக்கப்பட்டு பின்னர் மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து மீண்டும் அவருடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் ஆணையகம் அறிவித்துள்ளது. எனவே இந்த விடயத்தில் தலைமைத் தேர்தல் ஆணையாளர் உடனடியாக தலையிட வேண்டும்.

இந்த விடயமானது ஆபத்தான முன்னுதாரமாக அமைந்து விடக்கூடும். விஷாலை முன்மொழிந்தவர்கள் மிரட்டப்பட்டுள்ளார்கள் எனக் கண்டறியப்பட்டால் அவர்கள் மீது சட்டரீதியில் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

எனவே ஆர்.கே.நகர் தேர்தல் அதிகாரி சட்டத்தை மீறியுள்ளார், அவர் தேர்தலை நேர்மையாக நடத்துவார் என்ற நம்பிக்கை இல்லை அதனால் அவரை உடனடியாக மாற்றவேண்டும் எனவும் திருமாமாவளவன் அறிக்கையின் ஊடாக தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)