Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

30 வருடங்களாக கவனிப்பாரற்ற நிலையில் வாழும் திஸ்பனை தோட்ட தொழிலாளர்கள்

In இலங்கை
Published: 06:02 GMT, Dec 6, 2017 |
0 Comments
1199
icon_com
This post was written by : Elakkiya

கொத்மலை உப பிரதேச செயலக பகுதிக்கு உட்பட்ட கெட்புலா திஸ்பனை பகுதி பெருந்தோட்டங்களில் இந்திய வம்சாவளி தொழிலாளர் குடும்பங்கள் கடந்த 30 வருடங்களுக்கும் மேலாக கவனிப்பாரற்ற நிலையில் வாழ்ந்து வருகின்றனர்.

கடந்த 1984 ஆம் ஆண்டு முதல் 1993 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் முன்னெடுக்கப்பட்ட மகாவலி அபிவிருத்தி திட்டத்திற்காக மேற்படி தோட்ட தொழிலாளர்கள் வாழ்ந்த தோட்டப் பகுதிகள் இலங்கை அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்டது.

இந்நிலையில் குறித்த தோட்டப் பகுதிகளில் வாழ்ந்த இவர்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு அக்கரப்பத்தனை, டயகம, கந்தபளை உள்ளிட்ட சில இடங்களில் குடியமர்த்தப்பட்டனர். தலா பத்தாயிரம் ரூபா வீதம் வழங்கப்பட்டே இவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

மகாவலி அபிவிருத்தித் திட்டம் நிறைவேற்றப்படுவதற்கு தோட்டத் தொழிலாளர்கள் வசித்த பகுதிகள் அரசாங்கத்தினால் பெற்றுக் கொள்ளப்பட்ட போதிலும் அப்பகுதியை சேர்ந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு மாற்று இடங்களில் காணிகளும், வீடுகளும் வழங்குவதற்கான தீர்க்கமான முடிவுகள் எடுக்கப்பட்டதன் பின்பே தொழிலாளர் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர்.

இதற்கான ஒப்பந்தம் சௌமிய மூர்த்தி தொண்டமான் மற்றும் பெரியசாமி சந்திரசேகரன் ஆகிய முக்கிய தலைவர்களுடன் கைச்சாத்திடப்பட்ட பின்னரே தொழிலாளர் குடும்பங்கள் வெளியேற்றப்பட்டனர்.

இவ்வாறு தொழிலாளர்களுக்கு கொடுக்கப்பட்ட வாக்குறுதிகள் தற்போதுவரை செயற்படுத்தப்படவில்லை என்ற நிலையில் 30 வருடங்களாக அவர்கள் இன்னல்களுக்கு முகம்கொடுத்து வருகின்றனர்.

இப்பகுதியில் மகாவலி அபிவிருத்தி திட்டத்தின் பின்னர் மீள் குடியேற்ற நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும் வெளியிடங்களிலிருந்து சிங்கள மக்களே குடியேற்றப்பட்டதாகவும் தமிழர்களுக்கு சொந்தமான பெருந்தொகையான ஏக்கர் காணிகளில் அவர்கள் குடியேறியதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறிருக்க மகாவலி அபிவிருத்தி திட்டம் மற்றும் மீள்குடியேற்ற திட்டங்களின் பின்னர் மாறி மாறி ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் மகாவலி அபிவிருத்தி திட்ட அமைச்சை உருவாக்கி அப்பகுதியில் வாழ்கின்ற சிங்கள மக்களுக்கு காணி உறுதி பத்திரங்களையும் வழங்கினர்.

குடும்பத்தில் ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் வழங்கப்பட்டு மாற்று இடங்களுக்கு செல்லுமாறு பணிக்கப்பட்டிருந்த இந்த தோட்ட தொழிலாளர்கள், மாற்று இடங்களுக்கு செல்ல முடியாமலும், தமக்கென ஒரு இடம் கிடைக்காத நிலையிலும் அநாதைகளாகப்பட்டுள்ளனர்.

தற்பொழுது இவர்கள் வசிக்கும் இடமும், சிங்கள மக்களுக்கு பிரித்து கொடுக்கப்பட்ட ஒரு இடமாகவே காணப்படுகின்ற நிலையில் தொழில் ரீதியாகவும், குடியிருப்பு ரீதியாகவும், அடிப்படை வசதிகளிலும் பின் தள்ளப்பட்டுள்ளனர்.

தமக்கான இடம் கிடைத்தவுடன் சிங்கள மக்களின் இடங்களை கொடுத்து விட்டு செல்கின்றோம் என்ற வாக்குறுதியின் அடிப்படையில் வாழ்ந்து வருகின்ற இவர்கள் தமக்கென ஒரு இடத்தை தமிழ் தலைவர்கள் பெற்றுத் தருவார்களா என்ற ஏக்கத்தில் உள்ளனர்.

குறித்த பகுதியில் சிங்கள மக்களுடன் சேர்ந்து வாழும் இவர்களுக்கு, குடிநீர் பிரச்சினை, வீதி பிரச்சினை, தொழில் பிரச்சினை என பல்வேறு பிணக்குகள் ஏற்படுவதுடன் பாடசாலை கல்வி வசதிகளும் இல்லை.

இவ்வாறான நிலையில் மலையக தலைவர்களான ஆறுமுகன் தொண்டமான், பழனி திகாம்பரம் ஆகியோர்கள் தம்மீது கவனம் செலுத்தி கொலப்பத்தனை பகுதியில் வீடுகளை அமைத்து தர வேண்டும் என்றும், தொழில் நடவடிக்கைகளை முன்னெடுக்க சிங்கள மக்களுக்கு மகாவலி திட்டத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள உரிமைகளை போலவே தமக்கும் வழங்க முன்வர வேண்டும் என்றும் இம்மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

DSC00426 DSC00419 DSC00446 DSC00418 DSC00440

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)