Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரோஹிங்கியர்களின் மீள்குடியேற்றம் இரு மாதங்களுக்குள் ஆரம்பம்!

In உலகம்
Published: 06:04 GMT, Dec 6, 2017 |
0 Comments
1170
icon_com
This post was written by : Suganthini

பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ள ரோஹிங்கியா அகதிகளின் மீள்குடியேற்ற நடவடிக்கை எதிர்வரும் 2 மாதங்களுக்குள் ஆரம்பிக்கப்படுமென, மியன்மார் அரசாங்கம் அறிவித்துள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் கூட்டம், ஜெனீவாவில் நேற்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றபோதே, ஐ.நா.வுக்கான மியன்மார் தூதுவர் Htin Lynn இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் அவர் மேலும் தெரிவித்தபோது, ‘ரோஹிங்கியா அகதிகளை அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நோக்கில், பங்களாதேஷ் அரசாங்கத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றை அண்மையில்  நாம் செய்துள்ளோம். எனவே, இந்த அகதிகளின் மீள்குடியேற்ற நடவடிக்கையை எதிர்வரும் 2 மாதங்களுக்குள் ஆரம்பிக்க நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றார்.

‘ரோஹிங்கியா அகதிகள் தமது சொந்த இடங்களுக்குப் பாதுகாப்பான முறையில் மீளத் திரும்பி, தங்களது வாழ்வாதார நடவடிக்கையை தொடங்குவதற்கு சர்வதேச சமூகத்துக்கு நாம் உத்தரவாதமளிக்கின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

கடந்த ஓகஸ்ட் மாத இறுதியிலிருந்து மியன்மாரின் ராஹினி மாநிலத்தில் நிலவிய வன்முறை காரணமாக 6 லட்சத்துக்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் பங்களாதேஷில் தஞ்சம் கோரியுள்ளனர்.

இந்த அகதிகளை, அவர்களின் சொந்த இடங்களில் மீள்குடியேற்றும் நடவடிக்கை தொடர்பாக பங்களாதேஷ் மற்றும் மியன்மார் நாடுகளுக்கிடையில் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்று கடந்த நொவம்பர் மாதம் 23ஆம் திகதி கையொப்பமாகியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)