Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தாயில்லாத பிள்ளைகளாக தவிக்கும் அ.தி.மு.கவை வீழ்த்த திட்டம்! – செல்லூர் ராஜூ

In இந்தியா
Updated: 06:59 GMT, Dec 6, 2017 | Published: 06:08 GMT, Dec 6, 2017 |
0 Comments
1220
icon_com
This post was written by : Puvanes
raju001

தாயில்லாத பிள்ளைகளாக தவிக்கும் அ.தி.மு.கவை வீழ்த்த பலரும் திட்டம் தீட்டிக்கொண்டு வருகின்றார்கள், எனினும் அவர்களுடைய எண்ணம் ஒருபோதும் நிறைவேறாது என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

நேற்று மதுரையில் இடம்பெற்ற, மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் முதலாம் ஆண்டு நினைவுநாள் அமைதிப் பேரணியின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் நிலைதடுமாறியுள்ள அ.தி.மு.கவிற்குள் குழப்பத்தினை ஏற்படுத்த பலரும் முயற்சி செய்து கொண்டு வருகின்றார்கள் அவர்களுடைய செயற்பாடுகளை தகர்த்து எதிர்வரும் இடைத்தேர்தலில் நாமே வெற்றிபெறுவோம் எனவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்ந்தும் விஷால் பற்றி அவர் கருத்துகளை முன்வைக்கையில், நேற்று பெய்த மழைக்கு இன்று முளைத்த காளான் மட்டுமே விஷால் அவருக்கு எம்மை எதிர்க்கும் வல்லமை கிடையாது எம்மை எதிர்க்கக்கூடிய வல்லமை தி.மு.கவிற்கு மட்டுமே இருக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

அதேபோன்று, நாம் மக்களோடு மக்களாக நின்று அவர்கள் குறைகளைக் கேட்பவர்கள் நாம் ஆனால் தினகரன் மேன்மாடத்தில் நின்றுகொண்டு மக்களைப்பார்த்து பேசுகின்றவர் எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)