Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

கனடாவின் காலநிலை மாற்றத்திற்கான தூதுவர் பதவி மீண்டும் வெற்றிடமானது!

In கனடா
Updated: 06:18 GMT, Dec 6, 2017 | Published: 06:17 GMT, Dec 6, 2017 |
0 Comments
1077
icon_com
This post was written by : Risha
can

கனடாவின் காலநிலை மாற்றத்திற்கான தூதுவர் (Jennifer MacIntyre) பதவி விலகியுள்ளார்.

தனது கணவரின் தீடிர் மரணத்தை தொடர்ந்து இப்பதவியிலிருந்து விலக தீர்மானித்திருப்பதாக அவர் தனது டுவிட்டர் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, ”கனடாவின் சர்வதேச காலநிலை மாற்றத்திற்கான நிகழ்ச்சி நிரலை செயற்படுத்துவதற்கு கிடைத்த வாய்ப்பானது மகத்தானதாகும். ஆனால், தற்போதுள்ள நிலைப்பாட்டில் இப்பதவியில் நீடிப்பது என்பது சாத்தியமற்றதாகும்.

ஆனால், கனடாவின் காலநிலை மாற்றத்திற்கான சிறப்பான நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படும் என்பதில் நம்பிக்கை கொண்டுள்ளேன் எனக் குறிப்பிட்டுள்ளார்.

2015ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் வெற்றிடமாகக் காணப்பட்ட கனடாவின் காலநிலை மாற்றத்திற்கான தூதுவர் பதவிக்கு Jennifer MacIntyre, கடந்த ஜுன் மாதம் நியமிக்கப்பட்டார்.

இவர் கனடாவின் காலநிலை மாற்றத்திற்கான தூதுவராக பதவி வகிப்பதற்கு முன்னர் சுவிட்சர்லாந்து மற்றும் லீச்டன்ஸ்டன் நாடுகளுக்கான கனேடிய தூதுவராக கடமையாற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)