Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வர்த்தக உடன்படிக்கைகள் ஓரிரவில் நடைமுறைப்படுத்தும் விடயமல்ல: ஜஸ்ரின் ட்ரூடோ

In கனடா
Updated: 11:19 GMT, Dec 6, 2017 | Published: 06:39 GMT, Dec 6, 2017 |
0 Comments
1108
icon_com
This post was written by : Risha

சீனாவுடனான வர்த்தக உடன்படிக்கைகளை நெறிமுறைப்படுத்துவதற்கு பல ஆண்டுகளாகலாம் எனவும், அது ஓரிரவில் நடைமுறைப்படுத்தும் விடயம் இல்லை என்றும் கனேடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.

சீனாவிற்கு உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜஸ்ரின் ட்ரூடோ, சீன பிரதமரை சந்தித்த பின்னர் கூட்டாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த கனேடிய பிரதமர், ”வர்த்தக உடன்பாடுகளை எட்டுவது என்பது ஓரிரவில் சாதிக்கும் விடயமல்ல. இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடர்ந்துவரும் அதேவேளை, எதிர்காலத்திலும் தொடரும்.

பல சவால்களுக்கு மத்தியில் உடன்பாடு எட்டப்படுவதானது வரலாற்றின் மைல் கல்லாகும். எமது குடிமக்களும், வணிகமும் நன்மையடையும் வகையிலான அதிக வாய்ப்புகளை நாம் எதிர்பார்த்துள்ளோம்.

அந்தவகையில்,இந்த பேச்சுவார்த்தையானது, உலகின் இரண்டாவது மிகப்பெரிய வர்த்தக பங்காளரான சீனாவுடன் வர்த்தக உறவுகளை மேம்படுத்துவதற்கு எமக்கு கிடைத்த முக்கிய தருணமாகும்” என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)