Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சசிகலாவையும் தினகரனையும் பிரிக்க முயற்சி?

In இந்தியா
Updated: 06:29 GMT, Dec 6, 2017 | Published: 06:29 GMT, Dec 6, 2017 |
0 Comments
1334
This post was written by : Puvanes

சசிகலாவின் ஆணைகளின் படியே தினகரன் தற்போது செயற்பட்டு வருகின்றார் என டி.டி.வி. தினகரன் தரப்பு சட்டத்தரணி எம்.ஜே.பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிட வேண்டாம் என சசிகலா, தினகரனை தடுத்ததாக சமூகவலைத்தளங்களில் செய்திகள் பரவிவருகின்ற நிலையில் இது தொடர்பாக இன்று ஊடகம் ஒன்றுக்கு கருத்து வழங்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், சசிகலாவின் ஆலோசனையின்படியே தினகரன் தற்போது சுயேட்சையாக தேர்தலில் களமிறங்குகின்றார். ஆனால் வேண்டுமென்றே வதந்திகள் பரப்பப்பட்டு வருகின்றன என பாலசுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.

இந்தவிடயத்தில் எந்தவிதமான உண்மைத்தன்மையும் இல்லை எனக் குறிப்பிட்ட அவர், சசிகலாவின் குடும்பத்திற்குள் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கிலேயே இவ்வாறான பொய்கள் பரப்பப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

பொய்களை பரப்பி அதில் அரசியல் இலாபங்களை தேட சிலர் முயன்று வருகின்றார்கள் எனச் சுட்டிக்காட்டிய பாலசுப்பிரமணியம், தினகரன் அரசியலில் ஈடுபடுவதனை பொறுத்துக்கொள்ள முடியாதவர்களே இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் மேலும் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg