Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த கட்ட பிரெக்சிற் பேச்சுவார்த்தையை விரைவாகத் தொடங்க எதிர்பார்ப்பு

In
Published: 06:37 GMT, Dec 6, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Suganthini

பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் பிரெக்சிற் பேச்சுவார்த்தையில், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையை விரைவாகத் தொடங்க  வேண்டுமென்று எதிர்பார்த்துள்ளதாக, ஸ்பெய்ன் பிரதமர் மரியானோ ரஜோய் தெரிவித்துள்ளார்.

லண்டனுக்கு விஜயம் செய்துள்ள ஸ்பெய்ன் பிரதமர் ரஜோய், பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேயை அவரது அலுவலகத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியபோதே, இதனைக் கூறியுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது மேலும் தெரிவித்த அவர், ‘பிரித்தானியாவுக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்குமிடையில் பிரெக்சிற் பேச்சுவார்த்தை நடைபெற்றுவரும் நிலையில், அடுத்த கட்டப் பேச்சுவார்த்தைக்கு வெகு விரைவாக நகர வேண்டுமென்று நாம் எதிர்பார்த்துள்ளோம்’ என்றார்.

மேலும், ‘பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் அடுத்த கட்டப் பேச்சுவார்த்தை வெகு விரைவாகத் தொடங்குமென்று நாம் உறுதியாக நம்புகின்றோம்’ எனவும் அவர் கூறியுள்ளார்.

இதேவேளை, கற்றலோனியாவின் ஒருதலைப்பட்சமான சுதந்திரப் பிரகடன நெருக்கடியின்போது, ஸ்பெய்ன் அரசாங்கத்துக்கு பிரித்தானியா வழங்கிய ஆதரவுக்கு பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேக்கு, ஸ்பெய்ன் பிரதமர் ரஜோய் நன்றி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)