Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சங்காவின் சாதனையை தவறவிட்டார் கோஹ்லி!

In கிாிக்கட்
Updated: 06:59 GMT, Dec 6, 2017 | Published: 06:59 GMT, Dec 6, 2017 |
0 Comments
3731
This post was written by : Anojkiyan

இந்திய கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி, இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் குமார் சங்கக்காரவின் உலக சாதனையை தவறவிட்டுள்ளார்.

ஒரு ஆண்டில் அனைத்து வகையான போட்டிகளிலும் அதிக ஓட்டங்களை பெற்ற வீரர் என்ற சாதனையையே அவர் தவறவிட்டுள்ளார்.

குமார் சங்கக்கார, கடந்த 2014ஆம் ஆண்டு அனைத்துவகையான போட்டிகளிலும் 2868 ஓட்டங்களைக் குவித்துள்ளமையே ஒருவீரர் ஒரு ஆண்டில் பெற்றுக்கொண்ட அதிகபட்ச ஓட்டமாக பதிவாகியிருந்தது. இதனை கோஹ்லி 51 ஓட்டங்களால் தவறவிட்டுள்ளார்.

நடப்பு ஆண்டில் இந்தியாவுக்கு இன்னும் 3 ஒருநாள் போட்டிகளும், 3 ரி-ருவவென்ரி போட்டிகள் மீதம் இருந்தாலும் அவற்றில் கோஹ்லிக்கு ஓய்வு கொடுக்கப்பட்டுள்ளது. இதனால் அவரின் சாதனை வாய்ப்பு பறிபோயுள்ளது.

விராட் கோஹ்லி இந்த ஆண்டில், டெஸ்ட் போட்டிகளில் 75.64 எனும் சராசரியில் 5 சதம் அடங்கலாக 1059 ஓட்டங்களும், ஒருநாள் போட்டிகளில் 76.84 எனும் சராசரியில் 6 சதம் அடங்கலாக 1460 ஓட்டங்களும், ரி-ருவவென்ரி போட்டிகளில் 299 ஓட்டங்களும் அடங்களாக மொத்தமாக 2818 ஓட்டங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg