Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ராஜினாமாவிற்கான காரணம் என்ன?- ஞானவேல்ராஜா விளக்கம்

In சினிமா
Updated: 07:11 GMT, Dec 6, 2017 | Published: 07:11 GMT, Dec 6, 2017 |
0 Comments
1039
icon_com
This post was written by : Risha
gna

திரைப்பட இணை தயாரிப்பாளர் அசோக்குமாரின் துயர முடிவு போன்ற சம்பவங்களுக்கு முடிவுகட்டும் வகையில் விநியோகஸ்தர் சங்கத்தின் தலைவராக போட்டியிடவுள்ளதாக ஞானவேல்ராஜா தெரிவித்துள்ளார்.

தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்ததற்கான காரணம் குறித்து தெளிவுபடுத்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் தெரிவித்த அவர், ”விநியோகஸ்தர்களின் நலனை கருத்திற் கொண்டு செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பதவியில் போட்டியிடுகின்றேன்.

விநியோகஸ்தர்கள் சங்க தலைவர் பொறுப்புக்கு போட்டியிடுபவர்கள், வேறு திரைப்பட துறை சார்ந்த சங்கங்களில் நிர்வாக பதவிகளில் இருக்கக் கூடாது என்பது சங்க விதிமுறையாகும்.

அதனாலேயே தயாரிப்பாளர்கள் சங்க செயலாளர் பதவியை ராஜினாமா செய்தேன். பதவி ராஜினாமாவிற்கு வேறெந்த காரணமும் இல்லை” என்றார்.

சென்னை செங்கல்பட்டு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்கத்துக்கான தலைவர் பதவிக்கு, தற்போதைய தலைவர் அருள்பதியை எதிர்த்து ஞானவேல்ராஜா போட்டியிடுகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)