Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஆர்.கே.நகரில் 5117 போலி வாக்காளர்கள் உள்ளதாக தகவல்!

In இந்தியா
Published: 07:05 GMT, Dec 6, 2017 |
0 Comments
1047
icon_com
This post was written by : Puvanes
Election001

சென்னை, ராதாகிருஷ்ணன் நகர் தேர்தல் தொகுதியில் இன்னும் 5117 போலி வாக்காளர்கள் உள்ளதாகவும், அவர்களை இனங்கண்டு உடனடியாக நீக்க வேண்டும் எனவும் தி.மு.க வேட்பாளர் மருதுகணேஷ் சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று முறையிட்டுள்ளார்.

அதனைத் தொடர்ந்து, அவரின் முறைப்பாட்டைச் செவிமெடுத்த நீதிபதிகள், இந்த விடயத்தினை மனுவாக தாக்கல் செய்தால் நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக தெரிவித்துள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதேவேளை, குறித்த தொகுதியில் தேர்தல் திகதி அறிவிக்கப்படும் முன்னரே அந்தத் தொகுதியில் உள்ள போலி வாக்காளர்களை நீக்கவேண்டும் என உயர்நீதிமன்றத்தில் தி.மு.க வழக்கு ஒன்றினை பதிவு செய்திருந்தது.

அதனைத் தொடர்ந்து ஆர்.கே.நகரில் இருந்து 45 ஆயிரம் போலி வாக்காளர்கள் நீக்கப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையகம் சார்பில் அண்மையில் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.

எனினும் மீண்டும் அத்தொகுதியில் போலிவாக்காளர்கள் உள்ளதாக தி.மு.க வேட்பாளர் முறையிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. இந்த விடயம் தொடர்பான தி.மு.க உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)