Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அத்தியவசியப் பொருட்களிற்கான சில்லறை விலை குறித்த வர்த்தமானி வெளியீடு!

In இலங்கை
Updated: 06:54 GMT, Dec 6, 2017 | Published: 06:54 GMT, Dec 6, 2017 |
0 Comments
1211
This post was written by : Ravivarman

உணவுப் பொருட்களுக்கான அதிகபட்ச சில்லறை விலை உள்ளடங்கிய வர்த்தமானி அறிவித்தல் இன்று (புதன்கிழமை) வெளியிடப்படவுள்ளதாக நுகர்வோர் அதிகாரசபை அறிவித்துள்ளது.

அத்தியவசியப் பொருட்கள் சிலவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலையை நிர்ணையிக்க நுகர்வோர் அதிகாரசபை தீர்மானித்துள்ளதாக அதன் தலைவர் ஹசித திலகரத்ன தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில் தேங்காய், பருப்பு, இறக்குமதி செய்யப்படும் கிழங்கு மற்றும் கருவாடு ஆகிய பொருட்களுக்கே அதிகபட்ச சில்லறை நிர்ணயிக்கப்படவுள்ளது.

தேங்காய் 75 ரூபாவாகவும், பருப்பு ஒரு கிலோ கிராம் 130 ரூபாவாகவும் திகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்படவுள்ளதுடன், இறக்குமதி செய்யப்படும் உருளைக் கிழக்கு ஒரு கிலோவிற்கான அதிகபட்ச சில்லறை விலை 76 ரூபாவாக நிர்ணயிக்கப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg