Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வெள்ளவத்தையில் கரையொதுங்கும் மீன்கள்: சுனாமியின் அறிகுறியா?

In இலங்கை
Published: 07:24 GMT, Dec 6, 2017 |
0 Comments
1287
icon_com
This post was written by : Ravivarman
yimg_iT6ZuD-640x425

வெள்ளவத்தை கடற்கரைப்பகுதியில் மீன்கள் பெருமளவில் கரையொதுங்கியமைக்கு காரணம் சுனாமி ஏற்படுவதற்கான அறிகுறி அல்ல என்று நாரா நிறுவனத்தின் தலைவர் அனில் பிரேமரத்ன இன்று (புதன்கிழமை) தெரிவித்தார்.

வெள்ளவத்தைக் கடற்கரையோர பிரதேசத்தில் வழமைக்கு மாறாக பெருமளவு மீன்கள் நேற்று காணப்பட்டுள்ளமை தொடர்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது குறித்து அவர் ஊடகவியலாளர்களுக்குக் கருத்து தெரிவிக்கையில், ”சுனாமிப் பேரலை ஏற்படவேண்டுமாயின் கடலின் ஆழமான பகுதியில் அல்லது கரையோரப்பகுதிகளில் நிலநடுக்கம் ஏற்படவேண்டும். கடற்பகுதியில் 10 தொடக்கம் 20 கிலோமீற்றர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டால் தான் சுனாமி நிலைமை ஏற்படும்.

அவ்வாறு எதுவும் இதுவரை பதிவாகவில்லை. இதனால் மீன்கள் பெருமளவில் கரைக்கு வருவதையிட்டு மீனவர்களோ பொதுமக்களோ அச்சம் கொள்ளத் தேவையில்லை. வெள்ளவத்தைக் கடற்கரையோரப் பிரதேசத்தில் மீன்கள் பெருமளவில் கரையொதுங்கியமை தொடர்பில் விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது” என அனில் பிரேமரத்ன மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)