Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மோடியிடம் நீதி கேட்கும் விஷால்!!

In இந்தியா
Published: 09:42 GMT, Dec 6, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : elayathambi

இம்மாதம் 21 ஆம் திகதி இடைத் தேர்தல் நடைபெற இருக்கும் ஆர்.கே.நகரின் குழப்பங்கள் இன்னும் தீராதிருக்கிறது. சுயேட்சை வேட்பாளராக மனுத் தாக்கல் செய்த நடிகர் விஷாலின் மனு நிராகரிக்கப்பட்டது. இந்த  நிராகரிப்பை பல குழறுபடிகளின் பின்னர் தேர்தல் அலுவலகம் உத்தியோக பூர்வமாக நேற்று இரவு அறிவித்தது.

இன் நிலையில் ஆர்.கே நகரில் நடைபெறும் நீதிக்கு புறம்பான அரசியல் செயற்பாடுகளை தான் இந்திய ஜனாதிபதிக்கும் பிரதமருக்கும் அறிவிக்க இருப்பதாக கூறியிருந்த  நடிகர் விஷால், தனது ருவிட்டரில்  இருவருக்குமான செய்தி ஒன்றை பதிவிட்டுள்ளார். அச் செய்தியில் நான் விஷால் சென்னை ஆர்.கே.நகர் தேர்தல் நடவடிக்கைகளில் என்ன நடக்கிறது என்பதை நீங்கள் அறிவீர்கள் என நான் நம்புகிறேன்.  ஏற்றுக் கொள்ளப்பட்ட எனது தேர்தல் மனு பின்னர் நிராகரிக்கப்பட்டுள்ளது. நீதியை நிலை நாட்ட இவ் விடயத்தை உங்கள் கவனத்திற்கு கொண்டு வருகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளார். இதற்கு முந்தைய ருவிட்டர் செய்தியில் 2016 ஆம் ஆண்டு டிசம்பர் 5 இல் அம்மா (ஜெயலலிதா)  இறந்தார், 2017ஆம் ஆண்டு டிசம்பர் 5 இல் ஜன நாயகம்  இறந்தது என விஷால் கூறி இருக்கிறார்.

இதேவேளை தமிழக பாரதீய ஜனதாக் கட்சியினர் மனு நிராகரிக்கப்பட்ட விஷாலும் தீபாவும், அரசியலுக்கு வர முன்னர் எப்படி  தேர்தல் மனுவை சரியாக விண்ணப்பிப்பது என்பதை தெரிந்து கொள்ள வேண்டும் என கூறியுள்ளனர். மறுபுறத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம், நேற்றுப் பெய்த மழைக்கு முளைத்த காளான் என விஷாலை விமர்சித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)