Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஓஹி புயலின் தாண்டவம்! – சூறாவளிப் பயணம் ரத்து

In இந்தியா
Updated: 10:15 GMT, Dec 6, 2017 | Published: 10:15 GMT, Dec 6, 2017 |
0 Comments
1207
This post was written by : Puvanes

குஜராத்தில் ஓஹி புயலின் சீற்றம் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ராகுல் காந்தி ஆகியோரது தேர்தல் பிரசார கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

ஓஹி புயலின் காரணமான குஜராத்தில் தொடர்மழை மற்றும், கடுமையான காற்றும் வீசிவருகின்றமையினால் இன்று காங்கிரஸ், மற்றும் பா.ஜ.க கட்சிகள் குஜராத்தின் முன்னெடுக்கவிருந்த பிரசார கூட்டங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன.

காங்கிரஸ் கட்சியின் தலைவர் ராகுல் காந்தி சூரத், தபி, நர்மதா, டஹ்ஸ் ஆகிய நகரங்களில் இன்று பிரசார கூட்டத்தில் உரையாற்றவிருந்தார் எனினும் சீரற்ற காலநிலைகாரணமாக குறித்த கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதோடு, மத்திய குஜராத்தில் அவர் மேற்கொள்ளவிருந்த சூறாவளி சுற்றுப்பயணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.

அதேபோன்று, சூரத் நகரில் மோடி தலைமையில் ஏற்பாடுசெய்யப்பட்டிருந்த பா.ஜ.கவின் பிரசார கூட்டமும் ரத்துசெய்யப்பட்டுள்ளதோடு, பா.ஜ.க தேசிய தலைவர் அமித்ஷாவின் தலைமையில் நாளை நடைபெறவிருந்த கூட்டங்களும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, 182 தொகுதிகளைக் கொண்ட குஜராத் சட்டசபைக்கு எதிர்வரும் டிசம்பர் 9 மற்றும் 14 ஆம் திகதிகளில் இரு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படவுள்ள காரணத்தினால் குஜராத்தில் தேர்தல் பிரசாரங்கள் தீவிரமடைந்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg