Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ஜேசன் ஹோல்டருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடை-60 சதவீதம் அபராதம்

In கிாிக்கட்
Published: 10:36 GMT, Dec 6, 2017 |
0 Comments
1051
icon_com
This post was written by : Anojkiyan
jas

மேற்கிந்திய தீவுகள் அணியின் தலைவர் ஜேசன் ஹோல்டருக்கு ஒரு டெஸ்ட் போட்டியில் விளையாட தடையும், போட்டி கட்டணத்தில் 60 சதவீதம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

வெலிங்டனில் நடைபெற்ற நியூசிலாந்து அணிக்கெதிரான முதலாவது டெஸ்ட் போட்டியில், குறிப்பிட்ட நேரத்துக்குள்ளாக நிர்ணயிக்கப்பட்ட ஓவர்களை வீசி முடிக்கத் தவறியதற்காகவே இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த போட்டியில் மேற்கிந்திய தீவுகள் அணி, 3 ஓவர்கள் குறைவாக பந்து வீசியதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. ஆகையால் அணியின் மற்ற வீரர்களுக்கு போட்டி கட்டணத்தில் 30 சதவீதம் அபராதமாக விதிக்கப்பட்டது.

கடந்த ஒரு ஆண்டில் மேற்கிந்திய தீவுகள் அணி டெஸ்ட் போட்டியில் பந்து வீச கூடுதல் நேரம் எடுத்து கொண்டது இது 2வது முறையாகும். கடந்த ஏப்ரல் மாதம் நடந்த பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டெஸ்ட் போட்டியிலும் இதே தவறுக்கு இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி, எதிர்வரும் 9ஆம் திகதி ஹமில்டனில் ஆரம்பமாகவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)