Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அதர்வாவின் ஜோடியாகும் ஹன்சிகா!

In சினிமா
Updated: 11:24 GMT, Dec 6, 2017 | Published: 10:39 GMT, Dec 6, 2017 |
0 Comments
1098
icon_com
This post was written by : Vithushagan
Evening-Tamil-News-Paper_86881220341

கடந்த சில காலங்களாக திரைப்பட வாய்ப்புக்கள் இல்லாமல் இருந்த நடிகை ஹன்சிகா தற்போது  அதர்வாவின் ஜோடியாக நடிக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ஜி.வி.பிரகாஷை வைத்து `டார்லிங்’, `எனக்கு இன்னொரு பேர் இருக்கு’ உள்ளிட்ட படங்களை இயக்கிய சாம் ஆண்டன் அடுத்ததாக அதர்வாவை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கவிருக்கிறார்.

அடிதடி கலந்த த்ரில்லர் படமாக உருவாகும் இந்த படத்தில் அதர்வா முதல்முறையாக பொலிஸ் அதிகாரியாக நடிப்பதாக கூறப்படுகிறது.

இந்த படத்தில் பிரபுதேவாவுடன் `குலேபகாவலி’ படத்திற்கு பிறகு படம் இல்லாமல் தவித்து வந்த ஹன்சிகாவுக்கு அடுத்த பட வாய்ப்பு கிடைத்திருக்கிறது.

யோகி பாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்திற்கு `விக்ரம் வேதா’ புகழ் சாம்.சி.எஸ். இசையமைக்க இருக்கிறார். கிருஷ்ணா வசந்த் ஒளிப்பதிவு செய்யும் இந்த படத்திற்கு ரூபன் படத்தொகுப்பு பணிகளை மேற்கொள்ள இருக்கிறார்.

இந்த படத்தின் பூஜை நாளை ஆரம்பிக்கும் நிலையில், படப்பிடிப்பு எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)