Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சிவனொளிபாதமலை பிரதேசம் இரத்தினபுரி மாவட்டத்திற்கு உரியது: பைஸர் முஸ்தபா!

In இலங்கை
Published: 10:38 GMT, Dec 6, 2017 |
0 Comments
1099
icon_com
This post was written by : Ravivarman
fe23299c330005b7579907debef23c81_XL

புதிய எல்லை நிர்ணயத்திற்கு அமைவாக புனித சிவனொளிபாதமலை பிரதேசம் இரத்தினபுரி மாவட்டத்திற்கு உட்பட்டதென மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

ஊடகவியளாலர்களுடனான சந்திப்பின் போதே இன்று (புதன்கிழமை) இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“எந்தவொரு நபருக்கும் வழக்குத் தாக்கல் செய்ய உரிமை உண்டு. நாம் புனித சிவனொளிபாதமலை எல்லையில் எந்தவிதமான மாற்றமும் மேற்கொள்ளவில்லை. நாம் இதனை நீதிமன்றத்தில் தெளிவுப்படுத்தி எமது தரப்பினது வாதத்தினை உறுதி செய்ய முடியும். இதனால் சிவனொளி பாதமலைக்கு எந்தவிதமான பாதிப்பும் ஏற்பட இடமளிக்கமாட்டோம்.

இதேபோன்று மாநகர மற்றும் மேல்மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க சிவனொளிபாதமலைப் பிரதேசத்தை புனித பிரதேசமாக வர்த்தமானியில் அறிவித்துள்ளார். இதனால் எந்தவொரு பிரச்சனையும் ஏற்படாது. இதனை பொறுப்புடன் கூறுகின்றேன். சிலர் சிவனொளிபாதமலை பிரதேசத்தில் இரத்தினபுரியில் இருந்து நுவரெலியா மாவட்டத்துடன் சேர்ந்து இருப்பதாக கூறுகின்றனர். இவ்வாறு எதுவும் நடைபெறவில்லை” என அமைச்சர் பைஸர் முஸ்தபா மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)