Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

3வது டெஸ்ட் சமநிலையில் நிறைவு- தொடர் இந்தியா வசம்

In கிாிக்கட்
Updated: 11:01 GMT, Dec 6, 2017 | Published: 10:55 GMT, Dec 6, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Anojkiyan
2.o.jpeg

இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையிலான மூன்றாவதும் இறுதியுமான டெஸ்ட் போட்டி, சமநிலையில் நிறைவடைந்துள்ளது.

எனினும் மூன்று போட்டிகளை கொண்ட இந்த டெஸ்ட் தொடரை இந்திய அணி, 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியுள்ளது.

கடந்த 2ஆம் திகதி டெல்லி மைதானத்தில் ஆரம்பமான இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற இந்திய அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய இந்திய அணி, முதல் இன்னிங்ஸிற்காக 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 536 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை தனது முதல் இன்னிங்ஸ் ஆட்டத்தை நிறுத்திக்கொண்டது. இதில் அணியின் அதிகபட்ச ஓட்டமாக விராட் கோஹ்லி 243 ஓட்டங்களையும், முரளி விஜய் 155 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர். பந்துவீச்சில் சந்தகன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதனைதொடர்ந்து தனது முதல் இன்னிங்சை தொடங்கிய இலங்கை அணி, சகல விக்கெட்டுகளையும் இழந்து 373 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதன்போது அணியின் அதிகபட்ச ஓட்டமாக தினேஷ் சந்திமால் 164 ஓட்டங்களையும், மத்தியூஸ் 111 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

163 ஓட்டங்கள் முன்னிலையில் தனது இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி, 246 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை பெற்றிருந்த வேளை தனது தனது இரண்டாவது இன்னிங்ஸ் ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டு, இலங்கை அணிக்கு 410 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் தவான் 67 ஓட்டங்களையும், கோஹ்லி மற்றும் ரோஹித் சர்மா ஆகியோர் தலா 50 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இதனையடுத்து, கடினமான வெற்றி இலக்காக இருந்தாலும் தனது நிதான துடுப்பாட்டம் மூலம் நிலைத்து நின்ற இலங்கை அணி, போட்டியை இன்று (புதன்கிழமை) சமநிலையில் நிறைவுசெய்தது.

இன்றைய இறுதி ஆட்டநேர முடிவில் 299 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகள் இழந்த நிலையில் இலங்கை அணி களத்தில் நிலைத்துநின்றது. இதனால் போட்டி சமநிலையில் நிறைவடைந்தது.

இரண்டாவது இன்னிங்ஸில் தனஞ்சய டி சில்வா 119 ஓட்டங்களை பெற்றிருந்த வேளை ஆட்டத்தை இடைநிறுத்திக்கொண்டார். பந்து வீச்சில் ஜடேஜா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரோஷான் சில்வா 74 ஓட்டங்களுடனும், டிக்வெல்ல 44 ஓட்டங்களுடனும் களத்தில் இருந்தனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)