Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரசாரங்களினூடாக குடும்பங்களுக்குள் பிளவுகளை ஏற்படுத்த வேண்டாம்: முபீன்

In இலங்கை
Updated: 11:31 GMT, Dec 6, 2017 | Published: 11:30 GMT, Dec 6, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Elakkiya
ULMN. Mubeen

உள்ளுராட்சி மன்ற தேர்தல் பிரசாரங்களினூடாக குடும்பங்களுக்குள்ளும் பிரதேசங்களுக்குள்ளும் பிளவுகளை ஏற்படுத்த முயற்சிக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய கொள்கை பரப்புச் செயலாளரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சின் இணைப்புச் செயலாளருமான யூ.எல்.எம்.என். முபீன் தெரிவித்தார்.

இன்று (புதன்கிழமை) இது தொடர்பாக கருத்து தெரிவித்த அவர், காத்தான்குடி பிரதேசத்தில் முஸ்லிம் காங்கிரஸுக்கான ஆதரவுத்தளம் அதிகரித்தவாறே உள்ளதால் எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் காத்தான்குடி நகரசபையின் ஆட்சியை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கைப்பற்றும் அதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் பிரச்சாரங்களில் நாகரீகத்தைக் கடைப்பிடிப்பதும் குடும்பங்களிடையேயும் பிரதேசங்களுக்கிடையேயும் உள்ள ஒற்றுமை மற்றும் அமைதியை சீர்குலையாமல் பாதுகாப்பதும் வேட்பாளர்களின் சமூகப் பொறுப்பாக இருக்க வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஒரு குடும்பத்திற்குள் பல கட்சிகளை ஆதரிப்பவர்கள் இருக்கலாம். எனவே அரசியல் நடவடிக்கைகளுக்காக அமைதியான குடும்ப உறவுகளில் விரிசல்கள் ஏற்படுவதற்கு இடமளிக்க கூடாது என்றும், மக்களை ஆளப்போகின்றவர்கள் ஆற்றலுள்ளவர்களாகவும் அமைதியை விரும்புபவர்களாகவும், நாகரீகமானவர்களாகவும் இருக்க வேண்டும் என்றும் மக்கள் கொண்டுள்ள எதிர்பார்ப்பை  சிதறடித்து விடக் கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.

உள்ளுராட்சி மன்றங்களைக் கைப்பற்றுவதற்குக் கொடுக்கும் முக்கியத்துவத்தை விட குடும்ப, சமூக, பிரதேச அமைதியை பாதுகாத்துக் கொள்வதற்கு  முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் அதுவே காலத்தின் தேவையாகும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)