Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பிரெக்சிற் பேச்சுவார்த்தையை தொடர வேண்டுகோள்

In
Published: 11:15 GMT, Dec 6, 2017 |
0 Comments
1056
icon_com
This post was written by : Suganthini
poris

பிரெக்சிற் பேச்சுவார்த்தையை தொடர்ந்து முன்னெடுக்குமாறு, பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் பொரிஸ் ஜோன்ஸன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளிடமே, நேற்று (செவ்வாய்க்கிழமை) அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

பிரெக்சிற் பேச்சுவார்த்தையில் எதிர்கால வர்த்தக உடன்படிக்கை தொடர்பாக தீர்வு காணப்பட வேண்டுமெனவும், அவர் வலியுறுத்தியுள்ளார்.

பிரித்தானியா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரிகளுக்கிடையிலான பிரெக்சிற் பேச்சுவார்த்தையின்போது, வட அயர்லாந்து எல்லை விவகாரம் உட்பட போதியளவான யோசனைகளை பிரித்தானியா முன்வைக்க வேண்டுமெனவும் அவ்வாறு போதியளவான யோசனைகளை பிரித்தானியா முன்வைக்கும் பட்சத்திலேயே, அடுத்த கட்டப் பேச்சுவார்த்தையைத் தொடர முடியுமென்று ஐரோப்பிய ஒன்றியம் அறிவித்திருந்தது.  இதனையடுத்தே, ஐரோப்பிய ஒன்றியத்திடம் பிரித்தானிய வெளிவிவகாரச் செயலாளர் ஜோன்ஸன் இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறத் தீர்மானித்துள்ள நிலையில், அயர்லாந்து எல்லை விவகாரம் தொடர்பாக ஜனநாயக ஒன்றியக் கட்சியுடன் உடன்பாடொன்றை எட்ட வேண்டுமென்று பிரித்தானியப் பிரதமர் தெரேசா மேக்கு அக்கட்சி வலியுறுத்தியுள்ளதுடன்,  கடினமான எல்லை விவகாரத்தை தவிர்க்க வேண்டுமெனவும், அக்கட்சி கூறியுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)