Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேற்றுக்கிரகவாசிகள் பூமிக்கு வருகின்றார்கள் – ஆனால் ஏன் தென்படுவதில்லை?

In அறிவியல்
Published: 11:21 GMT, Dec 6, 2017 |
0 Comments
2663
icon_com
This post was written by : Puvanes
alien001

பரந்து விரிந்த இந்த பிரபஞ்சத்தில் பூமியில் மட்டுமே உயிர்கள் வாழுகின்றன என்ற வாதம் மத ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்டாலும் விஞ்ஞான, அறிவியல் ரீதியில் இது முற்றாக மறுக்கப்பட்டு வருகின்றது.

அந்தவகையில் பூமியைத் தாண்டி உயிரினங்கள் வாழ்கின்றன குறிப்பாக அறிவிற் சிறந்த புத்திஜீவிகள் பிரபஞ்சத்தில் உள்ள கிரகங்களில் வசித்து வருகின்றன, அவை (அவர்கள்) பூமிக்கு அடிக்கடி வந்து செல்கின்றன என்பவை விஞ்ஞானிகளது வாதம்.

இவ்வாறு பூமிக்கு வேற்றுக்கிரகவாசிகள் வந்துசெல்வது தொடர்பாக பல்வேறுபட்ட கருத்துகள் கூறப்பட்டாலும் அவர்கள் ஏன் பூமிவாசிகளின் கண்களுக்கு தென்படவில்லை என்பது மிகப்பெரிய கேள்வி.

குறித்தகேள்விக்கு தொல்பொருள் ஆய்வாளரும், அறிவியலாளருமான Zecharia Sitchin என்பவர் விளக்கமளித்துள்ளார். இவர் வேற்றுக்கிரகவாசிகளுக்கு பூமி தற்போது அவசியப்படவில்லை அதனாலேயே அவர்கள் பூமியில் தென்படுவதில்லை எனக் குறிப்பிடுகின்றார்.

இதற்கு இரு உதாரணங்களை அவர் முன்வைக்கின்றார். அதாவது ஒருகாலத்தில் பூமிக்கு வந்த வேற்றுக்கிரகவாசிகள் தங்கள் தேவை தீர்ந்தபின்னர் பூமியில் இருந்து சென்றுவிட்டனர். அவர்களுக்கு பூமி ஒரு பொருட்டல்ல.

மிருகக்காட்சிசாலையில் உள்ள மிருகங்கள், மனிதர்கள் பற்றி அறிந்திருந்தாலும் அவர்களுடைய சிந்தனைகள், செயற்பாடுகளை அவற்றினால் தடுக்கமுடியாது. இதுபோன்றே வேற்றுக் கிரகவாசிகளின் செயற்பாடுகளையும் மனிதர்களால் உணர்ந்து கொள்ள முடிவதில்லை என்கின்றார்.

மற்றொரு உதாரணமான அமேசன் காடுகளில் வசிக்கும் சிறு பூச்சியினம் தொடர்பான மனிதர்கள் அக்கறை காட்டுவதில்லை. அவைகளுக்கு மனித இனம் என ஒன்று இருப்பதே தெரியாது ஆனால் மனித இனத்திற்கு அது அவைகளைப்பற்றி தெரியும் ஆனாலும் அவற்றினை ஆராய்வது கிடையாது.

அதுபோல வேற்றுக்கிரகவாசிகளுக்கு மனித இனம் இருப்பது தெரியும் ஆனால் அவர்களுக்கு பூமி ஒருபொருட்டல்ல எனவே அவர்கள் பூமிவாசிகளின் கண்களுக்கு தென்படுவதில்லை என வாதங்களை முன்வைத்துள்ளார்.

எனினும் பூமியைத்தாண்டி அவர்கள் பயணிக்கும் போது பூமிக்கு அருகில் அல்லது பூமிக்கு வந்து செல்கின்றனர் அதுவே மனிதர்களின் கண்களுக்கு தென்படுகின்றது எனவும் சிட்ச்சின் தெரிவித்துள்ளார்.

ஆதாரரீதியில் இவை நிரூபிக்கப்படாவிட்டாலும் உலகில் நடைபெறும் சம்பவங்களின் அடிப்படையில் இவை ஏற்றுக்கொள்ளக்கூடிய வாதம் என ஆய்வாளர்கள் தெரிவித்துவருகின்றனர்.

அதன்காரணமாகவே வேற்றுக்கிரகவாசிகளின் இருப்பு குறித்து பல்வேறுவகையான தேடல் பூமியில் மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)