Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே புதிய கூட்டணி: சுரேஸ்!

In இலங்கை
Published: 11:43 GMT, Dec 6, 2017 |
0 Comments
1548
icon_com
This post was written by : Ravivarman

தமிழ் மக்களது எதிர்காலம் கருதி தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே அனைத்துக் கட்சிகளையும் இணைத்து இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என ஈ.பி.ஆர்.எல்.எப் அமைப்பின் தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் யாழ்ப்பாணத் தலைமை அலுவலகத்தில் இன்று (புதன்கிழமை) இடம்பெற்ற விசேட கூட்டத்திலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

”நாம் அனைவரும் ஓரணியில் நின்று தமிழ் மக்களது விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்துச் செல்வதற்கு எதிர்வரும் உள்ளூராட்சித் தேர்தலை இதற்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள இருக்கின்றோம். இன்று எமக்குள் ஏற்படுத்தப்பட்டுள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டி போடுவதுடன்,இன்னும் ஓரிரு நாட்களில் வேட்பாளர்கள் குறித்த அறிவிப்புக்களை வெளியிட இருக்கின்றோம்.

தமிழீழ விடுதலை இயக்கம் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக்கழகம் என்பன தமிழரசுக்கட்சியுடன் இணைந்து போட்டியிட முடியாதென ஊடகங்கள் மூலம் அறிவித்திருக்கின்றன. இந்நிலையில், இக்கட்சிகளுடன் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரசையும் எம்முடன் இணைந்து தமிழர்களின் எதிர்காலத்தினைக் கருத்திற் கொண்டு போராடுவதற்காக அழைக்கின்றோம்.

இக்குறித்த உள்ளூராட்சித் தேர்தல்கள் மூலம் கிராமிய மட்டங்களில் அபிவிருத்திகளை மேற்கொள்வதுடன், தமிழ் மக்களுக்கான ஓர் மாற்றுத்தலைமையினை ஏற்படுத்துவதற்கான செயற்பாடுகளையும் நாம் மேற்கொள்ளவுள்ளோம்” என சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)