Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய் சேதுபதி படத்தை புறக்கணிக்க நடவடிக்கை!

In சினிமா
Updated: 11:33 GMT, Dec 6, 2017 | Published: 11:33 GMT, Dec 6, 2017 |
0 Comments
1578
This post was written by : Risha
vijay-sethupathi_1495084865200

நடிகர் விஜய் சேதுபதியின் ‘ஒரு நல்ல நாள் பாத்து சொல்றேன்’ படத்தை புறக்கணிக்க வேண்டும் என்ற கருத்து சமூக வலைத்தளங்களில் தற்போது பரவலாகி வருகின்றது.

இந்த படத்தில், நல்லவன் ராமனா, ராவணனா? என்று விஜய் சேதுபதி சேதுபதி பேசியுள்ள வசனம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையிலேயே இவ்வாறு எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

இந்த வசனமானது, ராமனை அவதூறு செய்வதாக அமைந்துள்ளதாக, பாரதிய ஜனதா கட்சியினர் மத்தியிலும் இது விமர்சனத்திற்குள்ளாகிய நிலையில், குறித்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இத்திரைப்படம் வெளியிடப்படும்போது அதற்கு எதிராக போராட்டம் நடத்தவுள்ளதாகவும் சில தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், படக்குழுவினர் மத்தியிலும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

விஜய் சேதுபதி, கௌதம் கார்த்திக் இணைந்து நடித்துள்ள இப்படத்தில் டிரெய்லர் அண்மையில் வெளியாகியது. அதில், ‘ராமன் நல்லவனா? ராவணன் நல்லவனா?.. ராவணன், சீதையை தூக்கிட்டு வந்து கைபடாம பத்திரமா வெச்சிருந்தான்..அவனை நாம அரக்கன்னு சொல்றோம்… ராமன் சீதையை காப்பாத்தி கொண்டுபோய் அவளை சந்தேகத்தீயில போட்டு எரிச்சானா.. அவன நாம கடவுள்னு சொல்றோமா.. ராமனும் நான்தான், ராவணனும் நான்தான் என்று விஜய் சேதுபதி வசனம் பேசியுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg