Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வண்ணத்துப்பூச்சியின் சிறகசைப்பிற்கும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு! – தொடரும் சிக்கலான மர்மம்!

In அறிவியல்
Published: 11:53 GMT, Dec 6, 2017 |
0 Comments
1364
icon_com
This post was written by : Puvanes
Butterfly001

பிரபஞ்சத்தில் நடைபெறும் எந்தவொரு செயற்பாட்டிற்கும் காரணமும், தொடர்புகளும் உண்டு என்பது ஆய்வாளர்களது நீண்ட நாள் வாதமாகக் காணப்படுகின்றது.

அதாவது எங்கோ நடைபெறும் ஒரு சிறு நிலநடுக்கத்திற்கும் உலகில் மற்றுமோர் மூளையில் நடைபெறும் சுனாமி போன்ற கடல்கொந்தளிப்புக்கும் தொடர்பு உண்டு என்பது போன்று சிறு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பிற்கும் பாரிய நிலநடுக்கத்திற்கும் தொடர்பு உள்ளதாக ஆய்வாளர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகின்றனர்.

இதனையே பட்டாம்பூச்சி விளைவு (Butterfly effect) என அறிவியல் ஊடாக ஆய்வாளர்கள் தெரிவித்து வருகின்றனர். விஞ்ஞான ரீதியாக இது நிரூபிக்கப்படாவிட்டாலும் கூட கணித கோட்பாடுகளின் அடிப்படையில் இது முற்று முழுதான உண்மை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஓர் இயக்கத்தின் ஆரம்பம் அதாவது நுண்ணிய தொடக்கநிலையானது (dynamical system) நீண்டகால அமைப்பில் பாரிய வேறுபாடுகள் கொண்ட விளைவுகளை ஏற்படுத்தும் என்பதுவே பட்டாம்பூச்சி விளைவின் அடிப்படை.

கணிதவியலின் அடிப்படையில் இந்த கோட்பாட்டில் சில சிக்கல்கள் காணப்பட்டாலும் ஒட்டுமொத்தமாக மறுக்க அல்லது ஒதுக்கிவிட முடியாத நிலையில் சிக்கலான ஆய்வுகளாக தொடர்ந்து வருகின்றது.

பட்டாம்பூச்சி விளைவினை டொமினோ விளைவு (domino effect) என்ற சங்கிலித்தொடர் நடைமுறையின் ஊடாக கணிதவியலாலர்கள் விளக்குகின்றனர். அதாவது நீண்ட தூரத்திற்கு ஒன்றின் பின் ஒன்றாக அடுக்கப்பட்ட டொமினோ கட்டைகளில் ஆரம்பத்தில் ஏற்படுத்தப்படும் விளைவு இறுதிவரையிலும் தொடருகின்றன.

அதேபோன்று ஓர் ஒலி அதிர்வுகளாக தொடர்ந்து காதில் கேட்பதும் டொமினோ விளைவு எனக் கூறப்படுகின்றது. மற்றொரு வகையில், பனிஉருண்டை விளைவு (snowball effect) எனப்படுவதும் பட்டாம்பூச்சி விளைவிற்கு விளக்கமாக கூறுகின்றனர்.

பனிமலையின் உச்சத்தில் விழும் சிறியதோர் பனிக்கட்டி உருண்டு படிப்படியாக வளர்ந்து இறுதியில் பாரிய பனிச்சரிவையே ஏற்படுத்திவிடும் இவ்வாறாக ஓர் நுண்ணிய ஆரம்பவிளைவு பல பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தலாம் என்பது ஆய்வாளர்களது வாதம்.

எட்வர்ட் நோர்டொன் (Edward Norton Lorenz) தலைசிறந்த கணிதவியலாளரும் ஆய்வாளரும் 1963ஆம் ஆண்டு “ஒரு சிறு பட்டாம்பூச்சியின் சிறகசைப்பிற்கும் மற்றுமோர் மூளையில் நடைபெறும் சூறாவளிக்கும் தொடர்பு உண்டு” எனக் கூறி கணிதவியலின் அடிப்படையில் நிறுவியும் உள்ளார்.

எனினும் தற்போதைய அதியுச்ச விஞ்ஞான வளர்ச்சியிலும் கூட இந்த பட்டாம்பூச்சி விளைவு சிக்கலான, மர்மமான ஒன்றாகவே காணப்படுகின்றது. இப்போது இல்லாவிட்டாலும் எதிர்காலத்தில் இதற்கான முழு பதில் கிடைக்கும் என்பது எதிர்பார்ப்பு.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)