Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரிய நெருக்கடிக்கு தீர்வு காண ஐ.நா. தலைமையில் முயற்சி!

In உலகம்
Updated: 12:05 GMT, Dec 6, 2017 | Published: 12:04 GMT, Dec 6, 2017 |
0 Comments
1062
icon_com
This post was written by : Suganthini
north

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனையால் ஏற்பட்டுள்ள சர்வதேச அழுத்தங்களைக் குறைக்கும் வகையில் ஐ.நா. தலைமையில் நடவடிக்கை எடுக்கப்படலாமென, சில ராஜதந்திரிகளும் ஆய்வாளர்களும் ஊகம் வெளியிட்டுள்ளனர்.

வடகொரியாவுக்கு 4 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, ஐ.நா.வின் அரசியல் விவகாரங்களுக்கான தலைவர் ஜெப்ரி ஃபெல்ட்மன் சென்றுள்ளார். இந்நிலையிலேயே, ராஜதந்திரிகளும் ஆய்வாளர்களும் மேற்படி கருத்தை வெளியிட்டுள்ளனர்.

வடகொரியாவுக்குச் சென்றுள்ள ஜெப்ரி ஃபெல்ட்மன், வடகொரியாவின் உப வெளிவிவகார அமைச்சர் பாக் மயோங் குக் (Pak Myong Guk)   உட்பட உயர்மட்ட அதிகாரிகளை இன்று (புதன்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.

இதனையடுத்து, வடகொரிய வெளிவிவகார அமைச்சர் றி ஜொங் ஹோவை  (Ri Yong Ho) சந்தித்துக் கலந்துரையாட அவர் திட்டமிட்டுள்ளார்.

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் முன்னாள் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றியிருந்த ஜெப்ரி ஃபெல்ட்மனை, வடகொரியாவுக்கு விஜயம் செய்யுமாறு வடகொரிய அதிகாரிகளிடமிருந்து கிடைத்த அழைப்பின் பேரிலேயே இவரது வடகொரிய விஜயம் அமைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)