Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மாவீரர் தின நினைவேந்தல் நிகழ்வுகளில் கட்சிகளின் அரசியல்!

In இலங்கை
Updated: 12:11 GMT, Dec 6, 2017 | Published: 12:11 GMT, Dec 6, 2017 |
0 Comments
1212
This post was written by : Ravivarman

திருகோணமலை மாவட்ட சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் இடம்பெற்ற மாவீரர் தின நினைவேந்தல் செயற்பாடுகளில் நடைபெற்ற முரண்பாடான அரசியல் நிகழ்வுகள் கண்டிக்கத்தக்கவை என புனர்வாழ்வளிக்கப்பட்டு சமுகமயப்படுத்தப்பட்ட நபர்களின் ஒன்றியத் தலைவர் க. இன்பாராசா தெரிவித்துள்ளார்.

கட்டைப்பறிச்சானில் நேற்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,

“கடந்த கார்த்திகை 27ஆம் திகதி தேசிய மாவீரர் தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அவ்வகையில் சம்பூர் ஆலங்குளம் துயிலுமில்லத்தில் நடைபெற்ற மாவீரர் நினைவேந்தல் நிகழ்வுகள் துயிலுமில்லத்திற்கு உரித்தான மரியாதைகளுடன் நடைபெறவில்லை. அத்துடன் இந்த மாவீரர் தினத்திற்காக ஆரம்ப கட்டத்தில் எமது ஒன்றியத்தின் சார்பாக கிராம மட்டங்களில் குழுக்களை அமைத்து சிரமதானப் பணிகளிலும், நினைவேந்தல் நிகழ்வுக்கான முன்னேற்பாடுகளிலும் ஈடுபட்டிருந்தோம்.

இருந்தும் இச்செயற்பாடுகளுக்குப் பங்கம் விளைவிக்கும் வகையில் பெயர் குறிப்பிட்டுக் கூறக் கூடிய ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, ஈழவர் புரட்சிகர முன்னணி ஆகியன இணைந்து மக்களின் ஆதரவு அற்ற நிலையில் எமது ஒன்றியத்தின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவித்தன.

அதுமட்டுமன்றி அவர்களால் மேற்கொள்ளப்பட்ட மாவீரர் நினைவேந்தல் நிகழ்வு மாவீரர்களின் துயிலுமில்லத்திற்குரிய கௌரவத்தையும் மரியாதையையும் சீர்குலைக்கும் வகையில் முரண்பாடாக நடைபெற்றமை கண்டிக்கத்தக்கது” என க. இன்பாராசா தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg