Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அடுத்த ஆண்டுமுதல் வெளிவரும் ஸ்மார்ட்போன்களில் வியத்தகு மாற்றம்!

In அறிவியல்
Updated: 12:12 GMT, Dec 6, 2017 | Published: 12:12 GMT, Dec 6, 2017 |
0 Comments
2908
This post was written by : Puvanes

அடுத்த வருடம் முதல் வெளிவரவுள்ள ஸ்மார்ட்போன்களில் அதிஉயர்ந்த திறன்களையும், சிறப்பான செயல் திறனையும் மேம்படுத்தும் வகையில் ஸ்னாப்டிராகன் 845 எனப்படும் சிப்செட்டினை குவால்கொம் அறிமுகப்படுத்தவுள்ளது.

தற்போது கணினி மற்றும் ஸ்மார்ட்போன்களில் அதிகளவில் குவால்கொம் புரொஸர்கள் உள்ளடக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் அதிகூடிய வேகத்திறனை ஸ்னாப்டிராகன் 845 வெளிப்படுத்தும் என தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஸ்னாப்டிராகன் 845 புரொஸசர்களானவை 2018 தொடக்கம் உயர் ரக ஸ்மார்ட்போன்களில் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி 2018ஆம் ஆண்டு தொடக்கம் வெளிவரவுள்ள சியோமி ஸ்மார்ட்போன்களில் இந்த ஸ்னாப்டிராகன் 845 சிப் உள்ளடக்கப்படவுள்ளதாக சியோமி நிறுவனம் அறிவித்துள்ளது.

எனவே அடுத்த வருடம் முதல் வெளியாகும் ஸ்மார்ட் தொலைபேசிகள் தற்போது உள்ள ஸ்மார்ட் போன்களைவிடவும் செயல்திறன் மிக்கதாக அமையும் எனவும் குவார்கொம் நிறுவனம் தெரிவித்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg