Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வடகொரியாவின் நடவடிக்கைக்கு துருக்கி கவலை

In உலகம்
Published: 12:22 GMT, Dec 6, 2017 |
0 Comments
1095
icon_com
This post was written by : Suganthini
south

வடகொரியாவின் ஏவுகணை மற்றும் அணுவாயுதச் சோதனை நடவடிக்கைக்கு, துருக்கியப் பிரதமர்  Binali Yildirim கவலை வெளியிட்டுள்ளார்.

தென்கொரியாவுக்கு விஜயம் செய்துள்ள துருக்கியப் பிரதமர், தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜேயை முதலில்  சந்தித்துக் கலந்துரையாடினார்.

இதனையடுத்து, தென்கொரியப் பிரதமர் லீ நக் யொன்னை (Lee Nak-yon), சியோலில் இன்று (புதன்கிழமை) சந்தித்துக் கலந்துரையாடியபோதே, வடகொரியாவின் நடவடிக்கை தொடர்பாக அவர் கவலை வெளியிட்டுள்ளார்.

இந்தச் சந்திப்பின்போது அவர் மேலும் தெரிவிக்கையில், ‘வடகொரியா ஏவுகணை மற்றும் அணுவாயுதத் திறன்களை வளர்த்துவருவது தொடர்பாக அண்மைக்காலமாகவிருந்து  துருக்கி கவனம் செலுத்தி வருகின்றது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை எமக்கு கவலையளிக்கின்றது’ என்றார்.

கடந்த நொவம்பர் மாதம் 29ஆம் திகதி, வடகொரியா புதிய வகையான ஏவுகணைச் சோதனையொன்றை நடத்தியதுடன், இந்த ஏவுகணை முழு அமெரிக்காவையும் தாக்கும் வல்லமை கொண்டதெனவும் எச்சரித்திருந்தது. இந்நிலையிலேயே, துருக்கியப் பிரதமரின் இந்தக் கருத்து வெளிவந்துள்ளது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)