Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்றவேண்டும்: ஸ்டாலின்

In இந்தியா
Published: 12:33 GMT, Dec 6, 2017 |
0 Comments
1132
icon_com
This post was written by : Puvanes

சென்னை ஆர்.கே.நகர் தொகுதியில் தேர்தல் நடத்தும் தேர்தல் அதிகாரியை உடனடியாக மாற்ற வேண்டும் என தி.மு.கவின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

சென்னையில் இன்று ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

மேலும், ஆர்.கே.நகர் தொகுதியில் நடைபெற்றுள்ள ஆளும்கட்சியின் அத்துமீறிய செயற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையகம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

தற்போதைய நிலையில் ஆளும் கட்சியில் ஆலோசனைகளுக்கு அமைவாகவே தேர்தலை நடத்தும் அதிகாரி செயற்பட்டு வருகின்றார் என்பது தெளிவாகிவிட்டதாக குறிப்பிட்ட ஸ்டாலின், குறித்த தேர்தல் தொகுதியில் இன்னும் 5000 போலி வாக்காளர்கள் நீக்கப்படவில்லை எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே இந்த முறைகேடான ஆட்சியை நீக்க வேண்டும் என்பதில் மக்கள் மிகுந்த தெளிவாக உள்ளார்கள் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஆர்.கே.நகரில் போட்டியிட விஷால் தாக்கல் செய்த வேட்புமனு நிராகரிக்கப்பட்ட விடயமானது தமிழக அரசியலில் பல்வேறு வகையான விமர்சனங்களை தோற்றுவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)