Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

பேருந்து, லொறிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகித்தால் அனுமதிப்பத்திரம் ரத்து!

In இலங்கை
Updated: 14:43 GMT, Dec 6, 2017 | Published: 12:57 GMT, Dec 6, 2017 |
0 Comments
1173
icon_com
This post was written by : Ravivarman
1-115-765x510

பஸ் வண்டிகள் மற்றும் லொறிகளுக்கு மண்ணெண்ணெய் விநியோகிப்பதை உடனடியாக நிறுத்துமாறு எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளதாக பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சர் அர்ஜுண ரணதுங்க தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (செவ்வாய்க்கிழமை) வரவு செலவுத் திட்டத்தின் மீதான குழுநிலை விவாதத்தின் போதே இதனைக் குறிப்பிட்டார்.

மின்சக்தி, எரிசக்தி, பெற்றோலிய வள அபிவிருத்தி, கடற்றொழில் நீரியல்வள அபிவிருத்தி ஆகிய அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு நிறைவேற்றப்பட்டது.

இந்த விவாதத்தில் கருத்து வெளியிட்ட அமைச்சர் அர்ஜுண ரணதுங்க, 15 ஆயிரம் மெற்றிக்தொன் எரிபொருளை களஞ்சியப்படுத்தக்கூடிய தாங்கியொன்றை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளதாகத் தெரிவித்தார்.

மேலும் 6 எண்ணெய் தாங்கிகள் கொலன்னாவையில் நிர்மாணிக்கப்படும். விமானங்களுக்கு எரிபொருளை விநியோகிப்பதற்காக அதிவேக நெடுஞ்சாலைக்கு அண்மித்ததாக கட்டுநாயக்க வரை புதிய குழாய் கட்டமைப்பொன்று நிர்மாணிக்கப்படும்.

அதேவேளை விமான நிலைய எரிபொருள் விநியோக கட்டமைப்பு அபிவிருத்தி செய்யப்படுவதுடன், எரிபொருள் நிரப்பு நிலையங்களைப் பரிசோதிக்கும் நடைமுறையொன்றும் ஏற்படுத்தப்படுமென்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க மேலும் தெரிவித்தார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)