Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

மீசாலையில் டிப்பர் மோதி மனைவி உயிரிழப்பு: கணவன் படுகாயம்!

In இலங்கை
Published: 13:44 GMT, Dec 6, 2017 |
0 Comments
1735
icon_com
This post was written by : Ravivarman
aa

யாழ்ப்பாணம் – சாவகச்சேரி – மீசாலை ஏ9 வீதியில் டிப்பர் வாகனம் மோதி மனைவி சம்பவ இடத்தில் உயிரிழந்துள்ளதோடு கணவன் படுகாயமடைந்துள்ளார்.

இந்தச் சம்பவம் இன்று (புதன்கிழமை) மாலை இடம்பெற்றுள்ளதாக சாவகச்சேரிப் பொலிஸார் தெரிவித்தனர்.

சாவகச்சேரி வடக்கு, மீசாலையைச் சேர்ந்த 62 வயதுடைய சந்திரபாலன் பரமேஸ்வரி என்ற வயோதிபப் பெண் உயிரிழந்துள்ளதோடு 67 வயது சின்னையா சந்திரபாலன் என்ற வயோதிபரே படுகாயமடைந்துள்ளார்.

வீதியால் வந்த கார் ஒன்றைச் சோதனை செய்வதற்காக பொலிஸார் மறித்தபோது அதிலிருந்து இறங்குவதற்காக சாரதி கார் கதவைத்திறந்த வேளையில், அதனை விலத்திச் செல்ல முயற்சித்த தம்பதிகள் பயணித்த மோட்டார் சைக்கிளுடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

உயிரிழந்தவரின் சடலம் சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதோடு, கணவன் சிசிச்சை பெற்றுவருகிறார்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சாவகச்சேரிப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)