Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

விஜய்யின் படத்தில் ஓவியா நடிக்கவில்லை

In சினிமா
Updated: 15:30 GMT, Dec 6, 2017 | Published: 15:27 GMT, Dec 6, 2017 |
0 Comments
1435
This post was written by : S.K.Guna

இளைய தளபதி விஜய் – இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸுடன் இணையும் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்தப் படத்தில் ராகுல் ப்ரீத் சிங் கதாநாயகியாக நடிக்கிறார். முக்கிய வேடத்தில் நடிக்க நடிகை ஓவியாவை அணுகியபோது நாயகியாக மட்டுமே நடிப்பேன் என்று கூறி வாய்ப்பினை தவிர்த்தார்.

ஓவியா இப்போது ராகவா லோரன்ஸ் ஜோடியாக ‘காஞ்சனா 3’ படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ள நிலையில் நாயகி வேடம் இல்லாத பல படங்களை தவிர்த்துள்ளார்.

விஜய் – ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் துப்பாக்கி, கத்தி ஆகிய படங்கள் பெரும் வெற்றி பெற்றன. மூன்றாவது முறையாக இணையும் படமும் பேசப்படும் படமாகவே அமையும் என்று கூறப்படுகின்றநிலையில் அப்படத்தில் நடிக்க ஓவியா மறுத்துள்ளார்.

பிக்பொஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மக்களிடம் வரவேற்பு பெற்ற ஓவியா விஜய்யின் படத்தில் நடித்து இன்னும் புகழ்பெறலாம் என அவரது ரசிகர்கள் கருதுகின்றனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg