Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இயற்கை அனர்த்தத்தை எதிர்கொள்ளத் தயார்: மட்டு அரசாங்க அதிபர்

In இலங்கை
Updated: 17:38 GMT, Dec 6, 2017 | Published: 17:38 GMT, Dec 6, 2017 |
0 Comments
1235
This post was written by : Vithushagan

மட்டு. மாவட்டத்திலுள்ள அனைத்து பிரதேச செயலகங்கள், மற்றும் கிராம மட்டத்திலிருக்கின்ற அனர்த்த முகாமைத்துவக் குழுக்கள் அனைத்தையும் அனர்த்தத்திற்கு முன்னயாயத்தமாக இருக்குமாறு கூறியுள்ளோம் என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் எம். உதயகுமார் தெரிவித்தார்.

மட்டக்களப்பு கச்சோரியில் இன்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர், “ வங்காள விரிடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நாட்டின் வடக்கு கிழக்குக்கு அப்பால் திருகோணமலையிலிருந்து 850 கிலோமீற்றர் தொலைவில் நிலை கொண்டிருப்பதாக அறிக்கைகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

அதேவேளை, பொலிஸ், இராணுவம், கடற்படை பிரதேச செயலாளர்கள், முக்கிய நிறுவனங்களில் பிரதிநிதிகளை செவ்வாய்க்கிழமை அழைத்து உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளது.

சூறாவளியோ அல்லது சுனாமி அனர்த்தமோ ஏற்படுத்துவதற்குரிய வாய்ப்புக்கள் இல்லை. மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்படக் கூடிய அனர்த்தத்தில் இருந்து, மக்களைப் பாதுகாக்கும் வகையில், அனைத்து அதிகாரிகளும் முப்படையினரும் தயார் நிலையில் இருக்கிறார்கள்.

அதனால் மக்கள் அச்சங்கொள்ளத் தேவையில்லை.இதுவரையில் சுனாமி அனர்த்தமோ, சூறாவளி அனத்தமோ ஏற்படுவது தொடர்பான அறிவித்தல்கள் கிடைக்கப்பெறவில்லை.

வங்காள விரிகுடாவின் தென்கிழக்காக 850 கிலோமீற்றருக்கு அப்பால் தாழமுக்கம் உருவாகியிருக்கிறது. அது பலத்த காற்றாக மாறி வீசும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது கரையோரங்களில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது என்றும் வானிலை அவதான நிலையம் அறிவித்துள்ளது.

குறிப்பாக கடல் தொழில்களில் ஈடுபடாமல் இருக்குமாறு கடற்தொழிலாளர்கள். அறிவுறுத்தப்பட்டுள்ளார்கள் அத்துடன் கரையோங்களில் வசிப்பவர்களை அறிவூட்டுவதற்கான நடவடிக்கைகள் தொடர்பில் பிரதேச செயலாளர்கள் ஊடாக கிராம உத்தியோகத்தர்களுக்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையை சூழவுள்ள கடல் பிராந்தியங்களில் முக்கியமாக வடக்கு, கிழக்கு, தென்கிழக்கு கடல் பிராந்தியங்களில் காற்றின் வேகம்; 80 தொடக்கம் 100 கிலோமீற்றர் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மட்டக்களப்பு மாவட்ட ரீதியில் அனர்த்த முகாமைத்துவ செயலணி ஒன்றும் இன்றயத்தினம் இஸ்த்தாபிக்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் 24 மணிநேரமும் அனர்த்த முகாமைத்துவ செயலணி செயற்படவுள்ளது. இச்செயலணி தரவுகள் பேணுதல், முன்னாயத்த நடவடிக்கைள், அனர்த்தத்தின்போது, அனர்த்தத்தின் பின்னர் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைள் தொடர்பாக செயற்படவுள்ளது.

அனர்த்தம் ஒன்று இடம்பெற்றால் மட்க்களப்பு மாவட்டத்தில் கரையோரத்தில் இருக்கின்ற 9 பிரதேச செயலகங்கள் பாதிப்புக்குள்ளாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் பொதுமக்கள் அனாவசியமான தகவல்களை நம்பவேண்டாம், நாம் எமது உத்தியோகத்தர்களுடாக தகவல்களை வழங்குவோம்’ என்றார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg