Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

எந்தவொரு கட்சியுடனும் இணைந்து போட்டியிடுவதில்லை- பொது எதிரணி தீர்மானம்

In இலங்கை
Updated: 06:48 GMT, Dec 7, 2017 | Published: 02:20 GMT, Dec 7, 2017 |
0 Comments
1165
icon_com
This post was written by : Elakkiya
140324170308mahinda_rajapaksa

உள்ளூராட்சி தேர்தலில் அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து போட்டியிடுவதில்லை என பொது எதிரணியின் குழுக் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் கொழும்பில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற கூட்டு எதிரணியில் அங்கம்வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இடையிலான கூட்டத்தில் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

மாலை 6 மணியளவில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் கூட்டு எதிரணி எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதா என்பது தொடர்பாகவும் ஆரயப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் நிறைவில் அரசாங்கத்தில் அங்கம்வகிக்கும் எந்தவொரு கட்சியுடனும் இணைந்து போட்டியிடுவதில்லை என்ற தீர்மானம் எட்டப்பட்டுள்ளதாக பொது எதிரணியில் அங்கம் வகிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)