Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உள்ளூராட்சி தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டி

In இலங்கை
Updated: 03:19 GMT, Dec 7, 2017 | Published: 03:13 GMT, Dec 7, 2017 |
0 Comments
1086
icon_com
This post was written by : Elakkiya
44

உள்ளூராட்சி தேர்தலில் அம்பாறை மாவட்டத்தில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தனித்து போட்டியிடும் என அம்பாறை மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் கட்சியின் பொத்துவில் தொகுதி அமைப்பாளருமான பீ.எச். பியசேன தெரிவித்துள்ளார்.

அம்பாறை, தமன பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பெண்களுக்கு வாழ்வாதார உதவிகள் மற்றும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு தமன பிரதேசத்தில் நேற்று (புதன்கிழமை) இடம்பெற்றிருந்த நிலையில் அவர் மேற்படி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் அம்பாறை மாவட்டத்திலுள்ள சில இடங்களில் தனித்து போட்டியிடும் என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி தனித்து போட்டியிடுகின்ற பொத்துவில் தொகுதிக்கான வேட்பு மனுக்களை கட்சியின் பொது செயலாளரும் சட்டத்தரணியுமான சகால காரியவசம் தலைமையின் கீழ் தாக்கல் செய்துள்ளோம்.

அக்கரைப்பற்று மாநகர நபை மற்றும் பிரதேச சபை, அட்டாளைச்சேனை பிரதேச சபை, சம்மாந்துறை பிரதேச சபை, இறக்காமம் பிரதேச சபை போன்ற சபைகளுக்கான வேட்பு மனுக்களே தாக்கல் செய்யப்பட்டுள்ளன” என்று தெரிவித்துள்ளார்.

52 44 441 21

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)