Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

காங்கிரஸின் கருத்துக்கு மோடி கண்டனம்!

In இந்தியா
Updated: 09:54 GMT, Dec 7, 2017 | Published: 03:37 GMT, Dec 7, 2017 |
0 Comments
1128
icon_com
This post was written by : Kemasiya
modi

நாடாளுமன்றத் தேர்தலுடன் அயோத்தி வழக்கை தொடர்புபடுத்தியமைக்காக, காங்கிரஸ் கட்சிக்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்துள்ளார்.

குஜராத் தேர்தலை முன்னிட்டு நேற்று (புதன்கிழமை) தண்டுகா நகர் உட்பட பல்வேறு இடங்களில் பிரசாரம் மேற்கொண்டபோது, மேற்படி கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக மேலும் தெரிவித்த அவர்,

“மேல் நீதிமன்றத்தில், கபில்சிபல் தனது கட்சிக்காரருக்காக வாதிடுவதற்கு எல்லா உரிமைகளும் இருக்கிறது. ஆனால் நாடாளுமன்றத் தேர்தலுடன் அயோத்திப் பிரச்சினையை இணைத்து பேசுவது முறையான செயல் அல்ல.

அதேபோன்று, உத்தரப்பிரதேச தேர்தலுக்காக முத்தலாக் விவகாரத்தில் நான் மௌனமாக இருந்ததாக கூறுகிறார்கள். எல்லாவற்றையும் தேர்தலுடன் தொடர்புபடுத்தி பார்க்க கூடாது. மனிதநேயத்திற்கு முதலிடம் கொடுக்க வேண்டும்” என பிரதமர் மோடி கூறினார்.

அயோத்தியில் 1992 ஆம் ஆண்டு வரை இருந்த பாபர் மசூதி  இடம் யாருக்கு சொந்தம் என்னும் விவகாரம் தொடர்பான வழக்கில், நாடாளுமன்றத் தேர்தலை இணைத்து பேசியதை முன்னிட்டே, நேற்றைய  பிரசாரத்தின்போது பிரதமர் மோடி மேற்படி தெரிவித்துள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)