Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரெலோ கூட்டமைப்புக்குள் நீடிக்கும் – சுமந்திரன் நம்பிக்கை

In இலங்கை
Updated: 07:47 GMT, Dec 7, 2017 | Published: 03:37 GMT, Dec 7, 2017 |
0 Comments
1359
icon_com
This post was written by : Elakkiya

தமிழரசுக் கட்சிக்கும் ரெலோ அமைப்பினருக்ம் இடையில் ஏற்பட்டுள்ள தொகுதி பங்கீட்டு முரண்பாடுகள் தொடர்பில் அதன் தலைவர் செல்வம் அடைக்கலநாதனுடன் கலந்துரையாடப்பட்டுள்ளதாகவும் ரெலோ தொடர்ந்தும் கூட்டமைபில் இணைந்திருக்கம் எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

பங்காளிக் கட்சிகளுக்கு இடையிலான ஆசனப் பங்கீடு தொடர்பான முரண்பாடுகள் தொடர்பில் ஆதவனுக்கு கருத்து தெரிவிக்கும்போது நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான ஆசனப் பங்கீட்டு விவகாரம் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் குறித்து கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் ரெலோ அமைப்பின் தலைவரும் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகியோருக்கு இடையில் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

நேற்று (புதன்கிழமை) இரவு நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனின் இல்லத்தில் இடம்பெற்ற இந்த சந்திப்பின் போது, ஆசனப் பங்கீடுகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டதாகவும், மேற்படி பிரச்சினையை தீர்ப்பதற்கான மாற்றுவழிகள் தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டதாகவும்  எம்.ஏ. சுமந்திரன்   தெரிவித்துள்ளார்.

மேலும், பிரச்சினைகளை தீர்ப்பதற்காக தம்மால் கண்டறியப்பட்டுள்ள மாற்றுவழிகள் தொடர்பாக இருகட்சிகளினதும் உறுப்பினர்களுடன் கலந்துரையாடி இணக்கப்பாடு எட்டப்படும் பட்சத்தில் தமிழ்ச் தேசியக் கூட்டமைப்புடன் இணைந்து ரெலோ அமைப்பும் தேர்தலில் போட்டியிட முடியும் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)