Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

சட்டவிரோதமாக மாடுகளை கடத்தியவர் கைது

In இலங்கை
Updated: 04:11 GMT, Dec 7, 2017 | Published: 04:11 GMT, Dec 7, 2017 |
0 Comments
1094
icon_com
This post was written by : Elakkiya
DSC03742

மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பகுதியில் சட்டவிரோதமாக மாடுகளை கொண்டு சென்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (புதன்கிழமை)  குறித்த நபர் கைது செய்யப்பட்டதுடன் அவர் கொண்டு சென்ற ஏழு மாடுகள் மற்றும் கன்டர் ரக வாகனமும் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பட்டிப்பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக மாடுகள் காணாமல் போவதாக பல்வேறு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்ட நிலையில் இளைஞர் குழுவினரின் உதவியுடன் மேற்படி வாகனம் மடக்கி பிடிக்கப்பட்டது.

குறித்த மாடுகள் கொள்ளையிடப்பட்டதா அல்லது விற்பனை செய்யப்பட்டதா என்பது தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)