Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

இலங்கை அணியை கண்டு வியந்து போன கோஹ்லி

In கிாிக்கட்
Published: 04:20 GMT, Dec 7, 2017 |
0 Comments
4143
icon_com
This post was written by : Anojkiyan
India's captain Virat Kohli attends a news conference ahead of their first test cricket match against England in Rajkot

இலங்கை அணி ஒரு இலக்கை நோக்கி செல்கின்றமை மற்றும் அவர்களின் நம்பிக்கையை நடைபெற்று முடிந்த டெஸ்ட் தொடரில் அவதானித்தாக இந்தியக் கிரிக்கெட் அணியின் தலைவர் விராட் கோஹ்லி தெரிவித்துள்ளார்.

இந்திய மற்றும் இலங்கை அணிகளுக்கிடையில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்று முடிந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியின் பின், நிருபர்களிடம் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். இதன்போது அவர் மேலும் கூறுகையில்,

“இந்த டெஸ்ட் தொடர் தனிப்பட்ட ரீதியில் எனக்கு மற்றும் எனது அணி வீரர்களுக்கு சிறப்பாக அமைந்திருந்தது. தன்னம்பிக்கையை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் எவ்விதமான சவால்களையும் எதிர்க்கொள்ள முடியும். நான் அணியின் தலைமைப் பதவியை பெற்றிராத போது, அணியினுள் காணப்படும் சிரமங்கள் மற்றும் தலைவர் ஒருவர் முகங்கொடுக்க வேண்டிய சவால்களை அறிந்திருக்க வில்லை.

ரோஹித் சர்மா, மத்திய தர வரிசை வீரர் என்ற வகையில் போட்டியை மாற்றக்கூடியவர். அவரின் துடுப்பாட்ட முறை தொடர்பில் நான் மகிழ்ச்சி அடைகின்றேன். அனைத்து வீரர்களுக்கும் அனைத்து சந்திர்ப்பங்களிலும் தமது திறமையை வெளிப்படுத்த முடியாது.

இலங்கை அணி வீரர்கள் சிறப்பாக விளையாடினர். இறுதி நாளில் இலங்கை அணி வீரர்கள் மிகவும் இக்கட்டான நிலையில் களமிறங்கிய போதும், எமது அணி வீரர்களுக்கு விக்கெட்டுக்களை கைப்பற்ற எவ்வித வாய்ப்புக்களையும் வழங்கவில்லை” என கூறினார்.

மூன்று போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரை இந்தியா 1-0 என்ற கணக்கில் கைப்பற்றியமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)