Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் அறிவிப்பால் இருளில் மூழ்கிய இயேசு கிறிஸ்துவின் பிறப்பிடம்!

In உலகம்
Published: 04:55 GMT, Dec 7, 2017 |
0 Comments
1432
icon_com
This post was written by : Risha

இயேசு கிறிஸ்து பிறந்த இடமான பெத்லஹேம் மற்றும் பாலஸ்தீனத்தின் நிர்வாக தலைநகரான ரமல்லாஹ் ஆகிய இரு நகரங்களிலும் கிறிஸ்மஸ் அலங்கார விளக்குகள் அணைக்கப்பட்டு இருளடையச் செய்ப்பட்டுள்ளன.

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்த நிலையில், அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இவ்விரு நகர்களையும் பாலஸ்தீனியர்கள் நேற்று (புதன்கிழமை) இருளடையச் செய்துள்ளனர்.

கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு மேற்கொள்ளப்பட்டிருந்த அலங்கார விளக்குகள் அனைத்தும் அணைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், கிறிஸ்மஸ் தினத்திற்கு முன்னர் இவ்விளக்குகள் மீண்டும் ஒளிரவிடப்படுமா என்பது நிச்சயமற்று காணப்படுவதாக பெத்லஹேமின் நகராட்சி ஊடக அதிகாரி குறிப்பிட்டார்.

இதேவேளை, மேற்குக்கரை மற்றும் காஸா ஆகிய பகுதிகளில், பாலஸ்தீனியர்கள் வீதியிலிறங்கி ட்ரம்பிற்கு எதிராக கோஷம் எழுப்பியதுடன், டயர்களை எரித்து எதிர்ப்பை வெளியிட்டனர்.

இவ்வாறான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் போது பாலஸ்தீனியர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதால், பாலஸ்தீனியர்களுக்கும், இஸ்ரேல் படையினருக்கும் மோதலும் வெடித்துள்ளது. ஆனால் இதன்போது யாரும் காயமடையவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)