Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ரயில் நிலையத்தை மறித்து மீனவர்கள் போராட்டம்! (2 ஆம் இணைப்பு)

In இந்தியா
Updated: 09:49 GMT, Dec 7, 2017 | Published: 04:57 GMT, Dec 7, 2017 |
0 Comments
1114
icon_com
This post was written by : Kemasiya
fish

காணாமல் போன மீனவர்களை மீட்ககோரி, குளித்துறை ரயில் நிலையத்தில் எட்டு மீனவ கிராமங்களைச்  சேர்ந்த மக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இப்போராட்டம் 1 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் நிலையில்,  தம்முடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு யாரும் முன்வரவில்லை என,  அம்மக்கள் கூறியுள்ளனர்.

மேலும் இப்போராட்டத்தில் 8 கிராமங்களை சேர்ந்த மீனவர்கள்  ஒன்றுதிரண்டு 35 கிராமங்களை கடந்து,  15 கி.மீ.தூரம் பேரணியாக நடந்துவந்து, குளித்துறை  ரயில்நிலையத்தின்  முன்பாக    போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந் நிலையில் குறித்த போராட்டம் காரணமாக,  அப்பகுதிக்கான ரயில்போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளதாக,  ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

காணாமல் போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி போராட்டம்!

காணாமல்போன மீனவர்களை மீட்க வலியுறுத்தி, களியக்காவினை மற்றும் கன்னியகுமாரி மாவட்டத்தில், இன்று (வியாழக்கிழமை) மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

கன்னியாகுமாரி மாவட்டம் நீரோடியிலிருந்து, இரவிபுத்தன்துறை வரையிலான எட்டு கிராமத்தைச்  சேர்ந்த மீனவ மக்கள், இந்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதன்போது 8 கிராமங்களையும் சேர்ந்த 1, 159 மீனவர்களை காணவில்லை என கூறும் பாதிக்கப்பட்ட மக்கள், கண்ணீர் அஞ்சலி பதாதைகள் மற்றும் மீனவர்களை கண்டறியும்படி அரசை வலிறுயுத்தும் பதாதைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் சின்னத்துறையில் இருந்து, குழித்துறை ரயில்நிலையத்திற்கு குறித்த பேரணி செல்கின்றமை குறிப்பிடத்தக்கது.

dff

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)