Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

உதய சூரியனில் போட்டியிடும் புதிய கூட்டமைப்பு கட்டுப்பணம் செலுத்தியுள்ளது

In இலங்கை
Updated: 04:53 GMT, Dec 7, 2017 | Published: 04:53 GMT, Dec 7, 2017 |
0 Comments
1418
This post was written by : Elakkiya

தமிழர் விடுதலைக் கூட்டணியின் உதய சூரியன் சின்னத்தில் போட்டியிடுவதற்கு தீர்மானித்துள்ள புதிய கூட்டமைப்பு இன்று (வியாழக்கிழமை) கட்டுப்பணம் செலுத்தியுள்ளது.

யாழ். மாவட்ட செயலக தேர்தல்கள் திணைக்களத்தில் இன்று காலை 9.30 மணியளவில் கட்டுப்பணம் செலுத்தப்பட்டுள்ளது.

வலி.வடக்கு பிரதேச சபையின் முன்னாள் தலைவர் உதயகுமார் மற்றும் வல்வெட்டித்துறை நகர சபையின் முன்னாள் தலைவர் ஆனந்தராஜ் ஆகியோர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

தமிழ் மக்களின் சுயாதீயத்தையும் உரிமையையும் நிலைநாட்டுவதற்காக புதிய கூட்டணியின் கீழ் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாகவும் இதுவரை காலமும் சில கட்சிகளினால் ஏமாற்றப்பட்ட தமிழ் மக்களை விடுவிப்பதற்காக தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் ஈபி.ஆர்.எல்.எவ் மற்றும் மேலும் பல அமைப்புக்கள் இணைந்து போட்டியிடுவதாகவும் புதிய கூட்டணி சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து பிரிந்து சென்றுள்ள அங்கத்துவ கட்சிகளில் ஒன்றான ஈ.பி.ஆர்.எல்.எவ் புதிய கூட்டமைப்பை அமைத்து உதயசூரியன் சின்னத்தில் போட்டியிடுவதாக நேற்று தீர்மானித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg