Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தினேஷ் சந்திமாலுக்கு செயற்கை முறையிலான சுவாச காற்று!

In கிாிக்கட்
Updated: 05:40 GMT, Dec 7, 2017 | Published: 05:40 GMT, Dec 7, 2017 |
0 Comments
1823
This post was written by : Anojkiyan

டெல்லி மைதானத்தில் நடைபெற்ற இந்திய அணிக்கெதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியில், காற்று மாசினால் உடல்நலக்குறைவுக்கு உள்ளான இலங்கை கிரிக்கெட் அணியின் தலைவர் தினேஷ் சந்திமாலுக்கு செயற்கை முறையிலான சுவாச காற்று வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை அணியின் தலைவர் தினேஷ் சந்திமால் அதிக நேரம் களத்தில் இருந்ததால் அவருக்கு வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டதாகவும் இதனைதொடர்ந்து அவருக்கு மூச்சு திணறல் ஏற்பட்டதால் செயற்கை முறையிலான சுவாச காற்று வழங்கப்பட்டதாகவும் கிரிக்கெட் வட்டாரங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஆனால், அவரின் உடல்நிலையில் எவ்வித பாதிப்பும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் மற்றும் நான்காம் நாள் ஆட்டத்தின் போது இலங்கை வீரர்களான சுரங்க லக்மால், கமகே ஆகியோர் மைதானத்தில் வாந்தி எடுத்து, பின்னர் மைதானத்தை விட்டு வெளியேறியிருந்தனர்.

அத்தோடு இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் மொஹமட் ஷமியும் மைதானத்தில் வாந்தி எடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg