Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

தேர்தல் அலுவலரின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது: ஸ்டாலின்

In இந்தியா
Updated: 09:57 GMT, Dec 7, 2017 | Published: 05:22 GMT, Dec 7, 2017 |
0 Comments
1112
icon_com
This post was written by : Kemasiya
er

விஷால் விவகாரத்தில் தேர்தல் அலுவலரின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என்று திராவிட முன்னேற்ற கழகத்தின் செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

ஆர்.கே.நகர் தேர்தல் தொடர்பாக இன்று (வியாழக்கிழமை) சென்னையில்  செய்தியாளர்களை சந்தித்த ஸ்டாலின் இதனை தெரிவித்துள்ளார்.

இந்த விடயம்  குறித்து  அவர் மேலும் தெரிவித்தபோது;

“விஷால் விவகாரத்தில் தேர்தல் அலுவலரின் செயற்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. அத்துடன் இவ்வாறான செயற்பாடுகளை பார்க்கும் போது, தேர்தலை நிறுத்துவதற்கான சதி இடம்பெறுகிறது என்ற திருமாவளவனின் கருத்து சரியானதுதான். மற்றும் விஷாலின் வேட்புமனு நிராகரிப்பு குறித்து தேர்தல் ஆணையகத்திடம் விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்துகின்றோம்.

எவ்வாறாயினும், தேர்தல் சரியான முறையில் நடததப்படுமாயின் இந்த தேர்தலில் திராவிட முன்னேற்ற கழகம் வெற்றி பெறுவது உறுதி” என்று குறிப்பிட்டார்.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)