Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

அவுஸ்ரேலிய தூதரகம் ஜெருசலேமிற்கு நகர்த்தப்பட மாட்டாது: ஜுலி பிஷப்

In உலகம்
Published: 05:19 GMT, Dec 7, 2017 |
0 Comments
1139
icon_com
This post was written by : Risha

அவுஸ்ரேலிய தூதரகத்தை ஜெருசலேமிற்கு நகர்த்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படாது என அவுஸ்ரேலிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜுலி பிஷப் தெரிவித்துள்ளார்.

இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அங்கீகரித்துள்ள நிலையில், அது தொடர்பாக கன்பராவில் இன்று (வியாழக்கிழமை) கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அங்கு தொடர்ந்து தெரிவித்த அவர், ”அவுஸ்ரேலியாவானது, இஸ்ரேல், பாலஸ்தீனம் ஆகிய இரு நாடுகளுக்குமான தீர்வினை வகுப்பதற்கு கடமைப்பட்டுள்ளது. அதன்படி, அவுஸ்ரேலிய தூதரகம் தொடர்ந்தும் ரெல்-அவீவ் நகரிலேயே காணப்படும். அங்கிருந்தே எமது ராஜதந்திர செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும்” என்றார்.

இதேவேளை, இஸ்ரேலின் தலைநகரமாக ஜெருசலேமை அங்கீகரித்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், ரெல்- அவீவ் நகரிலுள்ள அமெரிக்க தூதரகத்தை ஜெருசலேமிற்கு நகர்த்துவதற்கான நடவடிக்கைகளிலும் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)