Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

‘போதையற்ற நாளையும் போதையற்ற நாடும்’- விழிப்புணர்வுப் பிரசாரத்தில் ஏறாவூர் பொலிஸார்

In இலங்கை
Published: 05:29 GMT, Dec 7, 2017 |
0 Comments
1107
icon_com
This post was written by : Elakkiya

‘போதையற்ற நாளையும் போதையற்ற நாடும்’ என்ற தொனிப்பொருளிலான விழிப்புணர்வு பிரசார நடவடிக்கைகளில் ஏறாவூர் பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தரவின் பணிப்புரைக்கமைய இன்று (வியாழக்கிழமை) இந்த விழிப்புணர்வு பிரசார நடவடிக்கை ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

ஏறாவூர் பொலிஸ் நிலையத்திற்கு முன்பாக ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் தலைமையில் மேற்படி விழிப்புணர்வு பிரசாரம் முன்னெடுக்கப்படுகின்றது.

பொதுப்போக்குவரத்து பேரூந்துகள், மற்றும் முச்சக்கர வண்டிகளில் போதைப் பொருள் தொடர்பான விழிப்புணர்வு பிரசார ஸ்டிக்கர்கள் பொலிஸாரால் ஒட்டப்பட்டன.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஏறாவூர் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியும் சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகருமான சிந்தக பீரிஸ் இலங்கையை போதையற்ற தூய்மையான நாடாக மாற்றுவதில் பொலிஸாருடன் இணைந்து பொதுமக்களும் பணியாற்றினால் எதிர்கால சந்ததியை போதைக்கு எதிரான சமூகமாக உருவாக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

DSC00951 DSC00939 DSC00926 DSC00918 Dr 6 dr3

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)