Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

ட்ரம்பின் அறிவிப்பு: சமாதான முன்னெடுப்புகளின் முடிவுக்கான சமிக்ஞை!

In உலகம்
Published: 05:59 GMT, Dec 7, 2017 |
0 Comments
1109
icon_com
This post was written by : Risha

இஸ்ரேல் தலைநகர் குறித்த அமெரிக்க ஜனாதிபதியின் அறிவிப்பானது, மத்திய கிழக்கில் அமெரிக்கா தலைமையிலான சமாதான முன்னெடுப்புகளை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியாகக் கருதப்படுவதாக ஆய்வாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மத்திய கிழக்கில் அமெரிக்காவின் தலையீடு குறித்து ஆராய்ந்தவரும் மத்திய கிழக்கு கொள்கை மையத்தின் அதிகாரியொருவரே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து தெரிவித்த அவர், “இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேம் அறிவிக்கப்பட்டுள்ளதாவது, அமெரிக்காவின் சமாதான முன்னெடுப்புகளின் முடிவையே வெளிப்படுத்துவதாக உள்ளது.

அமெரிக்காவின் இவ்வாறானதொரு அறிவிப்பின் பின்னர், அமெரிக்க ஆதரவுடனான சமாதான முன்னெடுப்புகளில் பாலஸ்தீன தலைமை எவ்வாறு ஈடுபடும் என்பது கேள்விக்குறியாகியுள்ளது.

பாலஸ்தீன தலைவர்கள் அமெரிக்காவின் சமாதான செயற்பாடுகளுக்கு ஆதரவளிப்பினும், அதனை பொதுமக்கள் அனுமதிக்கமாட்டார்கள்” என்றார்.

இஸ்ரேலியர்கள் மற்றும் பலஸ்தீனர்களுக்கு புனித இடமாக ஜெருசலேம் காணப்பட்டு வருகின்றது. தமது நாட்டின் தலைநகரமென்று இஸ்ரேல் கூறிவந்த அதேவேளை, எதிர்காலத்தில் கிழக்கு ஜெருசலேம் பலஸ்தீனத்தின் தலைநகராக விளங்குமென பலஸ்தீனம் கூறிவந்தது. இவ்வாறாக பெரும் சர்ச்சையாக உருவெடுத்திருந்த ஜெருசலேம் விவகாரத்தில் இஸ்ரேலுக்கு ஆதரவான அங்கீகாரத்தை ட்ரம்ப் வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg

உங்கள் கருத்துக்கள்

அன்புள்ள வாசகர்களே, நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. கருத்துக்கள் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படுகின்றன. எனவே நாகரீகமான கருத்துக்களை மட்டுமே பதிவு செய்யுமாறு வாசகர்கள் கேட்டுக்கொள்ளபடுகின்றனர். முக்கியமான புலங்கள் குறிக்கப்பட்டுள்ளன *

தமிழில் பதிவிடுவதற்கு Google Input Toolsயை பயன்படுத்தவும்.

  Type Comments in Tamil language (Press Ctrl+g to toggle between English and Tamil)