Chrome Badge
athavannews.png
Athavan News switch to mobile site switch to desktop site

வேட்புமனு நிராகரிப்பிற்கு நீதிகோரி விஷால் மனுத்தாக்கல்!

In இந்தியா
Updated: 07:15 GMT, Dec 7, 2017 | Published: 07:15 GMT, Dec 7, 2017 |
0 Comments
1264
This post was written by : Kemasiya

வேட்புமனு நிராகரிக்கப்பட்டமை தொடர்பில்  நீதியைப் பெற்றுத் தரவேண்டும் என்று நடிகர் விஷால் தேர்தல் ஆணையாளரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆர்.கே.நகர்தொகுதி இடைத்தேர்தலில் தன்னுடைய வேட்புமனு நிராகரிக்கப்பட்டமைக்கான காரணத்தை அறிந்துகொள்ளும் நோக்கில் நேற்று (புதன்கிழமை) தேர்தல் ஆணையாளர் ராஜேஸ் லக்கானியை (rajesh lakhani ) சந்தித்து பேசியபோதே மேற்குறித்த வேண்டுகோளை விடுத்துள்ளார்.

மேலும் இது தொடர்பில் ஊடகவியலாளர்களிடம் கூறிய விஷால்,

“இரண்டு தடவைகள் வேட்புமனு நிராகரித்தமை தொடர்பில் நீதி கோரி, தேர்தல் ஆணையாளரிடம் மனு தாக்கல் செய்துள்ளோம். இதை தொடர்ந்து அனுமதி கிடைக்குமாயின், ஆளுநரிடமும் மனு கொடுக்கவுள்ளோம்” என தெரிவித்தார்.

எதிர்வரும் 21 ஆம் திகதி ஆர்.கே.நகர் தொகுதிக்கான தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், சுயேட்சை வேட்பாளராக போட்டியிடுவதற்கு நடிகர் விஷால் தாக்கல் செய்திருந்த மனு நிராகரிக்கப்பட்டு, மீண்டும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அதன் பின்னர் மீண்டும் தேர்தல் ஆணையகம் குறித்த மனுவினை மறு நிராகரிப்பு செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

toon

ஆதவன் செய்திகளை E-mail இல் பெற்றுக்கொள்ள பதிவுசெய்யுங்கள்.

Subscribe
bg